MOVIE REVIEW KAKA MUTTAI –part 2b ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN -

. .

“நாளிக்கி ஆர்ப்பாட்டத்துக்கு வந்துரு, நூறு ரூபாயும் பிரியாணியும் தராங்களாம்” என்னும் வசனம் யதார்த்தத்தைப் பளிச்சென்று புரியவைக்கிறது. சிம்புவைப் பயன்படுத்தியுள்ள விதம் படத்துக்கு சுவையைக் கூட்டுகிறது. இந்தக் கதையை எல்லோரும் பார்க்கும்படியான சுவாரசியமான சினிமாவாக்கியதில் திரைக்கதைக்கும் ஒளிப்பதிவுக்கும், படத்தொகுப்புக்கும் முக்கியப் பங்கு உள்ளது. மணி கண்டனே ஒளிப்பதிவையும் மேற் கொண்டுள்ளார். சென்னையின் குப்பத்தைப் பிளந்துகொண்டு போய் வருகிறது கேமரா. குப்பத்து மனிதர்கள், அழுக்கான ஆடைகள், சுகாதாரமற்ற தெருக்கள், தனிக் கழிப்பறைகூட இல்லாத குடிசைகள், அருகிலே ஓடும் கூவம் இத்தனையையும் கொஞ்சம்கூட சினிமாத்தனமே இல்லாமல் அப்படியே அள்ளியெடுத்து வந்திருக்கிறார் மணிகண்டன்.
“Hey guys, be present tomorrow for the agitation, you will be given Rs.100 and a packet of Biriyani” – dialogues like this depicts the present day situations clearly. The way in which actor Simbu was used adds a feather in the cap to the movie.  To make this movie an interesting one, there is lot of contribution from the story, photography and editing. The Asst. Director Manikandam himself had handles the camera. The camera goes to the nook and corners of the Chennai slum. People of the slum, their dirt dresses and streets, houses without individual toilets, the River Coovam – all these are shown without any cinematic changes by the camera. Excellent job Mr. Manikandan. 
மனிதர்கள் மீதும், வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை தரும் சினிமாவாக இது இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் படத்தைத் திரையில் தந்த விதம். திரை மொழி புத்துணர்ச்சியூட்டக்கூடியதாக உள்ளது. படத்தின் வண்ணமும் வசீகரமானதாக அமைந்திருக்கிறது.
The main reason the movie instills confidence in people and life, is because of the screen play, the colour is great too and the cinema language is also enterprising.
படத்தின் பக்க பலம் சிறுவர்கள் ரமேஷும், விக்னேஷும். கதாநாயக நடிகருக்குக்கூட முதல் படத்தில் இவ்வளவு கைதட்டல் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஐஸ்வர்யா, சாந்திமணி,       ‘சூது கவ்வும்’ ரமேஷ், பாபு ஆண்டனி, கிருஷ்ணமூர்த்தி, ஜோ மல்லூரி என அனைவருமே படத்தின் உயிரோட்டத்துக்கு உதவுகிறார்கள். வாழ்வு மீதான நம்பிக்கை துளிர்க்கச் செய்யும் ஆக்கபூர்வமான ஆற்றல் படம் முழுவதும் உள்ளது. பிற் பகுதிக் காட்சிகளில் சற்றே எட்டிப் பார்க்கும் நாடகீயத் திருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டால் பிசிறற்ற, விறுவிறுப்பான, யதார்த்தமான கலைப் படைப்பு என்று இந்தப் படத்தைத் தயங்காமல் சொல்லிவிடலாம்.
Ramesh and Vignesh, the two boys are the strength of the movie. One wonders whether even any hero could have got so much claps and applauses on a debut movie. Other actors like Iswariya Santhimani, ‘soothu kavvum’ Ramesh,  Babu Antony, Krishnamoorthy, Joo Malluri – all help in keeping the movie lively and interesting.
The entire movie is filled with positive thinking that will enable new and fresh sprouts in our life. If you neglect the few scenes that appear like a drama in the second half – we can say for sure that this movie is a ---
FLAWLESS, INTERESTING AND FRANK ‘ART PIECE’.
***    ***   ***
வசனங்கள் இயல்பானவை. ஆனால் ஆழமானவை. படத் தொகுப்பாளர் கிஷோரும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர். எந்தக் காட்சியும் தேவையான அளவுக்கு மேல் நீளவில்லை. பாலிதீன் பையில் தண் ணீரைப் பிடித்துவந்து பாத்திரத்தை நிரப்புவதைப் போகிற போக்கில் ஒரு ஷாட்டில் சாதாரணமாகக் காட்டி விடுகிறார்.
அழுக்கான களத்தை எடுத்துக் கொண்டு நேர்மறையான உணர்வை எழுப்பும் ஆரோக்கியமான படத்தைத் தந்திருக்கும் மணிகண்டனும் இதைச் சாத்தியமாக்கிய தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன் ஆகியோரும் தமிழ் சினிமா வுக்கு புதிய வழியைக் காட்டியுள்ளார் கள். பொதுவாக விருதுகள் பெறும் படமென்றால் அழுதுவடியும் படங்கள் என்ற எண்ணத்தை மாற்றி ஆரோக்கியமான கலகலப்பைத் தந் திருக்கிறது காக்கா முட்டை.   
(LAST PARAGRAPH WILL BE SHORTLY UPDATED …)
TRANSLATION BY EZHILARASAN  - ‘ KAKA MUTTAI’ – TAMIL MOVIE REVIEW
--Translation by Ezhilarasan Venkatachalam.

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215