Featured Post

WRITTEN ENGLISH TRAINING THROUGH whatsapp / email how ? Ezhilarasan

எப்படி "வாட்ஸ் ஆப்" மூலம்  அல்லது "ஈ~மொயில்" மூலம்  ஆங்கில எழுத்து பயிற்சி கொடுப்பீர்கள்?. ... ஐயா சற்று விளக்க முடியு...

Sunday, June 25, 2017

Dog travels alone SPOKEN English THROUGH tamil EZHILARASAN


An intelligent dog that travels alone in bus

சியாட்டிலில் வசிக்கும் எக்லிப்ஸ் என்ற கறுப்பு லாப்ரடார் நாய், தினமும் பேருந்தில் தனியாகப் பயணம் செய்து வருகிறது.

ECLIPSE, a labrador breed dog, is travelling daily alone in a bus in Seattle.

 எக்லிப்ஸின் உரிமையாளர் ஜெஃப் யங் வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பூங்காவுக்கு பேருந்தில் அழைத்துச் செல்வார்.

The owner of Eclipse, Jeff Yan, will take it to a park that is a little far in a bus.

4 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் இருவரும் காத்திருந்தனர். பேருந்து வர தாமதமானதால் யங் ஒரு சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தார்.

Four years ago, he was waiting for the bus. But since it got delayed, he started to smoke a cigarette.

அப்போது பேருந்து வந்துவிட்டது. அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று நினைத்தார்.

But the bus arrived. But he decided to catch the next bus.

ஆனால் பொறுமையிழந்த எக்லிப்ஸ் பேருந்தில் ஏறிவிட்டது. யங் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், அது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பேருந்து கிளம்பிவிட்டது.

But the impatient Eclipse got into the bus. In spite of repeated commands, it refused to get down and the bus started to move.

அன்று முதல் இன்று வரை யங் வந்தாலும் வராவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து காத்திருக்கிறது.

From that day onwards, whether Yan comes or not, Eclipse comes to the bus stop at the scheduled time and waits.

இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் எக்லிப்ஸை மிகவும் பிடிக்கும் என்பதால், எந்தப் பேருந்திலும் ஏறிச் சென்றுவிடுகிறது.

Since all the bus drives like Eclipse, it gets into any bus and get down at the park.

ஜன்னல் ஓர இருக்கையைப் பார்த்து அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டே பூங்கா நிறுத்தம் வந்தவுடன் இறங்கிக்கொள்கிறது.

It chooses the window seat to sit and enjoys the sight seeing. Then it gets  down at its place.

 கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் ஜன்னல் ஓர இருக்கைக்காகக் காத்திருக்கிறது. யாராவது இறங்கினால் தாவி ஏறி விடுகிறது.

When there is rush, it waits its turn to sit in the window seat. When someone vacates the window seat, it immediately jumps into it and sits.

சிலர் எக்லிப்ஸை பார்த்தவுடனே இருக்கையைக் காலி செய்து கொடுத்து விடுகிறார்கள்.

Immediately of seeing Eclipse, certain  people vacate their seat and offer it to it.

 “எக்லிப்ஸின் அழகையும் புத்திசாலித்தனத்தையும் பார்ப்பவர்கள், இது தங்களது நாய் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

Many people who admire the beauty and intelligence of Eclipse and claim ownership to the dog.

2015-ம் ஆண்டு எக்லிப்ஸின் பேருந்து பயணம் சர்வதேச அளவில் செய்திகளில் இடம்பிடித்தது. அதிலிருந்து ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.

In 2015, the bus travel of Eclipse became international news. From then onwards, its admirers number had increased.

 பலரும் போட்டோ எடுத்து, ஃபேஸ்புக்கில் போடுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறது” என்று பெருமிதப்படுகிறார் யங்.

Many are eager to take a photo and post it in Facebook. It shows love towards everyone. " tells Yan with pride.

  “நாங்கள் எல்லோருமே எக்லிப்ஸ் வருகைக்காக காத்திருப்போம்.
 பூங்கா நிறுத்தம் வரும் வரை எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்” என்கிறார் சக பயணி டேவிட்.

"We all will be waiting for the arrival of Eclipse. It will keep us happy until the Park Stop comes." tells David a co_passenger.

பேருந்தில் தனியாகப் பயணம் செய்யும் புத்திசாலி நாய்!

An intelligent dog that travels alone in bus.

உலக மசாலா: புத்திசாலி நாய்!

Courtesy :

தி இந்து.. June 23, 2017
..
MENU 
 ..DONATE PLEASE 
..
PLEASE SUBSCRIBE
 TO MY YOUTUBE CHANNEL
ezhilarasan venkatachalam


Street Vendor Spoken English through Tamil EZHILARASAN

 
Smartest Street Vendor


உலகிலேயே மிக நேர்த்தியான தெரு வியாபாரியாக இருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த 43 வயது அயில்டன் மேனுவல் சில்வா.

Ayedon Manuvel Silva, Brazil, 43 years is the smartest street vendor in the world.

வெள்ளைச் சட்டை, கறுப்பு பேண்ட், தொப்பி, குளிர்க் கண்ணாடி, ஷூ சகிதம் நொறுக்குத் தீனிகளையும் குளிர்பானங்களையும் விற்பனை செய்து வருகிறார்.

Wearing a white shirt, black pant, hat, cooling glass, shoe etc he is selling snacks and cool drinks.

தினமும் அதிகாலை 5.30 மணிக்கு போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிக்கு வந்து, குளிர் பானங்களைத் தயார் செய்கிறார்.
7 மணிக்கு விற்பனையை ஆரம்பிக்கிறார்.

Every day he comes to a busy place at 5.30 am  and prepares cool drinks. At 7.00 am he starts his sales.

மாலை 5.30 மணி வரை வியாபாரம் செய்து, சுமார் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

He works till 5.30 pm and earns around Rs.8,000.

“நான் ஒரு பட்டறையில் வேலை செய்து வந்தேன். அந்த வருமானத்தை வைத்து மனைவி, 3 குழந்தைகளைப் பாதுகாக்க முடியவில்லை.

I was working in a workshop. But that earnings was insufficient for maintaining my wife and three children.

 வேறு நல்ல வேலை கிடைக்கும் வரை இந்த வேலையைச் செய்யலாம் என்று ஆரம்பித்தேன்.

II started this thinking that I can do it job until I get a better one.

 ஆனால் மக்களுக்கு தெரு வியாபாரிகள் மீது வெறுப்பு இருந்தது. கார் கண்ணாடியைக் கூடத் திறக்க மாட்டார்கள்.

But people hated street vendors. They never bothered even to lower their car window glass.

ஏன் இந்த வியாபாரத்துக்கு வந்தோம் என்று நினைத்தேன்.
I was fed up for having entered this job.

பிறகு உடை, ஷூ, குளிர்க் கண்ணாடி, தொப்பி என்று நேர்த்தியாகவும் நளினமாகவும் விற்பனையை ஆரம்பித்தேன்.

Later I did this job after changing my appearance and style i.e. wearing neat dress, shoes , cooling glasses, hat etc.

 எல்லோரும் பாப்கார்ன், சிப்ஸ், குளிர்பானங்களைக் கேட்டு வாங்க ஆரம்பித்தனர். இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் நன்றாகப் போகிறது.

Now everyone is getting pop corn, chips and cool drinks from me. I have been doing this for the last two years.

 எனக்கென்று அன்பான வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். இந்த வருமானத்தை வைத்து குழந்தைகளைப் பள்ளியிலும் மனைவியைக் கல்லூரியிலும் படிக்க வைக்கிறேன்.

My customers strength had increased. I am using this money to educate my children in school and my wife in college.

எனக்கு இந்தத் தொழிலில் முக்கியமான பிரச்சினை வெயில்தான். நாள் முழுவதும் வெயிலில் அலைந்தால் தோல் புற்றுநோய் வரும் என்று மனைவி பயப்படுகிறார்.

Sun light is the only problem in this  business. My wife says that I may get skin cancer if I work in the sunlight for the whole day.

இந்தத் தொழிலில் போட்டியில்லை. வருமானமும் கிடைக்கிறது. எல்லோரும் மரியாதை கொடுக்கிறார்கள்.

There is no competition in this job. And I also get enough earnings. And all people give me respect.

என் மனைவியின் படிப்பு முடிந்தவுடன் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு, ஒரு கடை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்” என்கிறார் சில்வா.

I plan to save some money and once my wife completes her studies, I should open a shop.

அலங்காரத்துக்கு மரியாதை தரும் உலகம்

The world respects smart looking people!

Courtesy :

தி இந்து தமிழ் .. 22.06.2017
..
MENU 
 ..DONATE PLEASE 
..
PLEASE SUBSCRIBE
 TO MY YOUTUBE CHANNEL
ezhilarasan venkatachalam


Sunday, June 18, 2017

EARTHQUAKE RESIST HOUSES SPOKEN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!
Wonderful houses that can withstand an earthquake. Version 2.

ஜப்பானில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் ஸ்டைரோஃபோம் (Styrofoam) வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
In Japan they are building Styrofoam houses that can withstand earthquakes.

ஸ்டைரோஃபோம் என்றவுடன் நாம் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் தட்டு, தம்ளர், பார்சல் கட்டும் தெர்மகோல்தான் நினைவுக்கு வரும்.
Styrofoam may remind you about use and throw tumblers and plates and the thermocol used in packing.

வீடு கட்டக்கூடிய ஸ்டைரோஃபோம் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது. இதில் கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியவை.
Styrofoam used for building houses is something similar, but it is a very advanced material.

விலை குறைந்தவை. வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவை. மிக வேகமாகவும் எளிதாகவும் வீட்டைக் கட்டி முடித்துவிட முடியும்.
They are very cheap and heat resistant. We can build these houses very fast and easily.

கடந்த பத்து ஆண்டுகளாகவே ஸ்டைரோஃபோம் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் மக்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
Though Styrofoam houses had been built for the past ten years, it was not famous.

கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மக்களின் கவனம் இந்த வீடுகள் மீது திரும்பி இருக்கிறது.
After the last year's earthquake it had got the attention of the people.

வீட்டின் எடை 80 கிலோ. பசையால் அரைக் கோள வடிவில் வீடுகள் கட்டப்படுகின்றன.
The total weight of the house is only 80 kgs. It  is built in the shape of an hemisphere.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வகையில் வீட்டின் உத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
The roof of the house had been designed so as to resist a powerful  earthquake.

ஒரே வாரத்தில் மூன்று மனிதர்களால் இந்த வீட்டை உருவாக்கிவிட முடியும். 387 சதுர அடி பரப்பளவும் 9.8 அடி உயரமும் இருக்கிறது.
Three men can construct this house in a time span of one week. Total area of this house is 387 square feet and the height is 9.8 feet.

இந்த வீடு துரு பிடிப்பதில்லை, கரையான்களால் அரிக்கப்படுவதில்லை, நீண்ட காலம் உழைக்கக்கூடியது.
There is no rusting and termites problem in these houses. And it also has a long life.

வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவுவதால் குளிர்சாதன பயன்பாடும் குறைந்துவிடுகிறது. 44 லட்சத்திலிருந்து 55 லட்சம் வரை வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
Since it is cool inside, so power consumption for A.C  is reduced. The cost of this house ranges from 44 lakhs to 55 lakhs.

இதில் நிரந்தரமாகவும் தங்கிக்கொள்ளலாம். அல்லது ஆபத்து ஏற்படும் காலங்களில் மட்டும் தங்கிச் செல்லலாம்.
You can either stay in these houses permanently or can stay temporarily when there is danger.

ஜப்பான் டோம் ஹவுஸ் நிறுவனம் ஆண்டுக்கு 100 ஸ்டைரோஃபோம் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Dome Houses of Japan has planned to sell 100 Styrofoam houses yearly.

நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!
Wonderful houses that can withstand an earthquake !
==========================
Courtesy:
தி இந்து : ஜுன் 15, 2017
உலக மசாலா:

Translated by
Ezhilarasan Venkatachalam


Author eats book spoken english through tamil ezhilarasan translation

British author eats book

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் புத்தகத்தை தின்ற ஆசிரியர்: தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு

British author eats book because he lost in a challenge ! Sensation in live television telecast.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது புத்தகத்தை தின்ற எழுத்தாளர் மேத்யூ குட்வின்.

Mathew Goodwin a British author eats his book in a live television show.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் சவால் விட்டு தோல்வி அடைந்ததால், தான் எழுதிய புத்தகத்தையே அதன் ஆசிரியர் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

British author eats his book because he lost in abchallenge. This incident created lot of sensation.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தெரசா மே போட்டியிட்டார்.

Recently the British parliamentary elections were held. Therasa May contested in this for the post of Prime Minister on behalf of the ruling CONSERVATIVE PARTY.

 முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் ஜெரிமி கார்பின் போட்டியிட்டார்.
And Jerme Carbin too contested for the same post on behalf of the LABOURS PARTY.

இந்நிலையில், பேராசிரியரும், ‘"ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் ஏன் வாக்களித்தது"’ என்ற தலைப்பில் பிரக்ஸிட் தொடர்பாக புத்தகம் எழுதியவருமான மேத்யூ குட்வின் என்பவர் ட்விட்டரில் ஒரு சவால் விடுத்தார்.

At this juncture, Mathew Goodwin, Professor and author of the book relating to BRICLIST and titled "Why Britain Voted To Exit European Union" announced a challenge in Twitter.

கடந்த மே மாதம் 28-ம் தேதி ட்விட்டரில் அவர் வெளியிட்ட சவாலில், ‘ஜெரிமி கார்பின் தலைமையில் தொழிலாளர் கட்சி 38 சதவீத வாக்குகளை பெற்றால், நான் எழுதிய பிரக்ஸிட் புத்தகத்தை சந்தோஷமாக தின்பேன்’ என்று கூறினார்.

He said in his challenge in TWITTER on MAY 28 ,"If the  LABOURS PARTY led by JERME CARBIN gets 38% votes I will happily eat  the BRICLIST book that I wrote".

மேலும், தேர்தலில் தொழிலாளர் கட்சி 5 சதவீத வாக்குகள்தான் பெறும் என்று மேத்யூ கணித்திருந்தார்.

Further he had made a prediction that LABOURS PARTY will get only 5% votes.

ஜெரிமி கார்பினுக்கு தொழிலாளர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் தேர்தலில் அந்த கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று மேத்யூ குட்வின் எதிர்பார்த்தார்.

The senior leaders on the Labours Party were opposing Jerme Karbin. Hence Mathew Goodwin thought that the people will not vote for him.

ஆனால், தேர்தலில் தொழிலாளர் கட்சி எதிர்பார்த்ததைவிட ஜெரிமி கார்பின் தலைமையில் 40 சதவீத வாக்குகளைப் பெற்றது.

But the LABOURS PARTY got 40 % votes under the leadership of Jerme Carbin which was more than their expectation.

 இதையடுத்து, ‘‘நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஸ்கை நியூஸ் சேனலில் மாலை 4.30 மணிக்கு என்னுடைய புத்தகத்தை தின்பேன்’ என்று மேத்யூ அறிவித்தார்.

Following this Mathew announced, "You have won. I will eat my book at 4.30pm in SKY NEWS channel".

அதன்படி, மேத்யூவை தனது நிகழ்ச்சிக்கு ஸ்கை நியூஸ் சேனல் அழைத்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மேத்யூவுக்கு, புத்தகத்தை தின்பது குறித்து நினைவூட்டப்பட்டது.

So the SKY NEWS Channel invited Mathew for the programme. And in the programme, Mathew was reminded about eating of his book.

அதை ஏற்றுக்கொண்ட மேத்யூ, தனது பிரிக்ஸிட் புத்தகத்தின் சில பக்கங்களைக் கிழித்து தின்றார்.

Accepting it, Mathew tore off a few pages from his BRICLIST book and ate them.

அந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

These scenes were telecast live and created lot of sensation.

‘‘சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவன் நான். எனவே, சொன்னபடி இங்கு உட்கார்ந்து புத்தகத்தை தின்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை (ஒளிபரப்பு செய்வது) பாருங்கள்’’ என்று தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறினார்.

He told the news reporter, "I always keep my words. Hence, I will sit here and eat my book. You please do your job ( telecasting job ).

பிரிக்ஸிட் புத்தகம் 272 பக்கங்களைக் கொண்டது. அத்தனை பக்கங்களையும் ஆசிரியர் மேத்யூ தின்றாரா என்பது தெரியவில்லை.

The total pages in the book were 272. We don't know whether Mathew ate all the pages or not.

நன்றி :

தி இந்து June 12, 2017

Translated by

Ezhilarasan Venkatachalam

..
MENU 

 EZHILARASAN VENKATACHALAM

Male Lion Cares for Cub spoken English through Tamil Ezhilarasan TranslationThe responsible male lion.
உலக மசாலா: பொறுப்பான ஆண் சிங்கம்

VALLAS, the male lion that lives in England's zoo in Blackpool has changed our opinion about male lions.

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் உயிரினப் பூங்காவில் வசித்து வரும் வாலஸ், ஆண் சிங்கத்தைப் பற்றிய கருத்துகளை மாற்றியமைத்திருக்கிறது!
In 2015, Ranjel and Vallas were a pair that mated and had a cub, Kaari.
After 9 months Ranjel, the mother,  died.

ரேச்சலும் வாலஸும் குடும்பம் நடத்தி 2015-ம் ஆண்டு காரி என்ற ஆண் குட்டியைப் பெற்றெடுத்தன. 9 மாதங்களில் ரேச்சல் இறந்து போனது.
Generally male lions only participate in reproductive activities.
And it is only the female that cares for the young ones.

பொதுவாக ஆண் சிங்கங்கள் இனப் பெருக்கம் செய்வதோடு கடமையை முடித்துக்கொள்கின்றன.
They rear them and also teach them to hunt.

பெண் சிங்கம்தான் குட்டிகளை வளர்த்து, வேட்டையாடக் கற்றுக் கொடுத்து, பராமரிக்கும்.
In the absence of the caring female, the male will just drive away hyenas that tries to attach the young ones.

பெண் சிங்கம் இல்லாதபோது கழுதைப் புலி, போட்டி ஆண் சிங்கங்கள் குட்டியைத் தொந்தரவு செய்தால் விரட்டும் பணியை மட்டும் ஆண் சிங்கம் மேற்கொள்ளும்.
Otherwise, the male does not play any role at all in rearing the young ones.

மற்றபடி குழந்தை வளர்ப்பில் ஆண் சிங்கங்கள் பங்களிப்பைச் செலுத்துவதில்லை.
Since there were no other young or female lions in the zoo, the caretakers left the cub with the male lion.

காரியைத் தவிர வேறு குட்டிகளோ, பெண் சிங்கங்களோ இல்லாத காரணத்தால் வாலஸிடம் குட்டியை விட்டது பூங்கா நிர்வாகம்.
Within a few days, Vallas, the male that was immersed in the sadness following the death of his female pair, started to care for its young one.

கண் முன்னே மனைவி இறந்த சோகத்தில் இருந்த வாலஸ், சில நாட்களிலேயே காரியை அன்புடன் கவனிக்க ஆரம்பித்தது.
It offer its food to the cub, Kaari and played with it too.

தனக்கு அளிக்கும் உணவைக் கொடுத்து சாப்பிட வைத்தது. காரியுடன் சேர்ந்து விளையாடியது.
It made him forget the loss of his mother.
And Kaari also became close to his dad.

தாயின் பிரிவு தெரியாமல் பார்த்துக்கொண்டது. அதனால் காரியும் அம்மாவை மறந்து அப்பாவுடன் நெருக்கமானது.
He followed his dad wherever he went. Observing his dad, very soon Kaari also learnt to roar.
It also learnt to hunt.

வாலஸ் செல்லும் இடங்களுக்கெல்லாம் காரியும் சென்றது. அப்பா கர்ஜிப்பதைப் பார்த்து, வெகு விரைவிலேயே மகனும் கர்ஜிக்கத் தொடங்கியது. வேட்டையாடும் வித்தையைக் கற்றுக்கொண்டது.
The zoo keeper, Adam tells,  "Generally male lions dont take up the family responsibilities.
For us,  it is very surprising to see the behaviour of Vallas.

“பொதுவாக ஆண் சிங்கங்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில்லை.
வாலஸைப் பார்த்து எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
Male lions usually dont have enough patience and tolerance.

ஆண் சிங்கங்களுக்குப் பொறுமையோ, சகிப்புத்தன்மையோ இருப்பதில்லை.

But whatever Kaari does, Vallas is tolerating it very patiently.
ஆனால் காரி என்ன செய்தாலும் சிறிதும் எரிச்சலடையாமல் வாலஸ் பொறுமை காக்கிறது.
It cares for him like a mother.

அம்மாவைப் போல அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறது.
It is such a beautiful sight seeing both of them walking together and also sitting together on the rock.

அப்பாவும் மகனும் ஒன்றாக நடந்து செல்வதையும் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

Even if Kaari takes a bigger meat peace, he shows patience.
He will eat what is left out after his son had eaten.

காரி பெரிய துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டாலும் அமைதி காக்கும். மகன் சாப்பிட்ட பிறகு மிச்சமிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்ளும்.


Vallas in  Kaari's hero. "
காரியின் ஹீரோ வாலஸ்தான்!” என்கிறார் உயிரினப் பூங்காவின் அதிகாரி ஆடம்.

நன்றி : தி இந்து June 18, 2017

Sunday, June 11, 2017

COFFEE FROM MOBILE COVER ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATIONFREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION COFFEE FROM MOBILE COVER

COFFEE FROM MOBILE COVERS ! 


There is a mobile company called MOKAES in Italy.
This company makes mobile covers or pouches.
We can prepare hot coffee from these covers.
இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற ஸ்மார்ட்போன் உறைகளைத் தயாரித்திருக்கிறது.  இதை ஸ்மார்ட்போனில் மாட்டிக்கொண்டால், தேவையானபோது சூடான காபியைப் பருகிக்கொள்ளலாம்.

மக்கள் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கிறார்கள். சிறிதளவு காபிக்கு எவ்வளவு பெரிய பதற்றத்தையும் குறைத்துவிடும் சக்தி இருக்கிறது. ஆனால் காபி கடையைத் தேடிச் செல்லவோ, காபி இயந்திரத்தை நாடவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

அதனால்தான் ஸ்மார்ட்போன் உறையிலேயே காபியை உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள்.
If we put some coffee  capsules in that cover and press a button, we will immediately get hot coffee.

All the necessary items like coffee powder, water etc will be in that capsules.

இந்த உறையை வாங்கி ஸ்மார்ட்போனில் மாட்டி, அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, இவர்கள் அளிக்கும் காபி காப்சூல்களை உறைக்குள் போட வேண்டும்.

இந்த காப்சூலுக்குள் தண்ணீரும் காபித்தூளும் கலந்திருக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் 50-60 டிகிரி செல்சியஸில் சூடான காபி தயாராகிவிடும். இன்னொரு பட்டனை அழுத்தி வெளியே வரும் காபியைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
The cost of this mobile cover is about Rs.3,600.
You can buy about 15 or 16 capsules and put in it.

This saves our time searching for coffee shops.
ஒரு காப்சூலுக்கு 25 மி.லி. காபி கிடைக்கும். புத்துணர்வூட்ட இது போதுமானது. சூடான காபி தயாரிக்கும் உறையால் ஸ்மார்ட்போனுக்கு எந்த ஆபத்தும் வராது.

உறையின் விலை 3,600 ரூபாய்.

15, 30, 50 என்ற எண்ணிக்கைகளில் காப்சூல்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

We can use this in many mobiles of famous companies like Apple, SAMSUNG, LG etc.

இந்த உறையை ஆப்பிள், சாம்சங், எல்ஜி போன்ற பிரபல மாடல்களில் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போனில் காபி; தொழில்நுட்பத்தின் உச்சம்!COURTESY :

TAMIL THE HINDU    June 1, 2017

TRANSLATED BY
MY SCHOOL STUDENTS

EZHILARASAN VENKATACHALAM
e3 institute
Salem 9


Stadium IN MID FOREST ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATIONFREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATIONFootball stadium in mid forest

மலேசியாவின் சபா மலையின் காட்டுக்குள் இருக்கிறது கண்களைக் கவரக்கூடிய இந்தக் கால்பந்து மைதானம். நான்கு பக்கங்களிலும் இருக்கும் வேலிகளைச் சுற்றி அடர்த்தியான செடிகளும் கொடிகளும் ஆக்கிரமித்துள்ளன. கதைகளில் வரும் அற்புத உலகங்களில் இருக்கும் மைதானம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது! லாங்கோன்கோன் பள்ளியின் ஆசிரியர், இந்த மைதானத்தைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். “இப்படி ஓர் இடத்தை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது. இயற்கையின் எழிலைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வெயில் காலத்தில் கூட இந்த மைதானம் குளுகுளுவென்று இருப்பதற்கு இந்தத் தாவரங்களே காரணம். தூய்மையான காற்றும் இதமான குளிரும் விளையாடுபவர்களுக்குப் புத்துணர்வை அளிக்கின்றன. எங்கள் மாணவர்கள் 15_நிமிடங்களில் மலையேறி, மைதானத்தை அடைந்துவிடுவார்கள். வாகனங்களில் சென்றால் 3 மணி நேரமாகும்என்கிறார் ஆசிரியர்.

உலகின் பசுமையான கால்பந்து மைதானம்!

In Saba Hills Malaysia, inside the forest there is a football stadium.
That football stadium attracts all the people's eyes.
On all the four sides of the stadium, there is a dense vegetation of plants and trees.
This stadium seems to be like one in fairy tales.
This picture was taken by a Lankonkon school teacher.
Nobody could have seen this place. We can't narrate its natural beauty.
Even in the sunny period, this stadium is always chill.
Since there is plenty of clean and fresh air, the players feel enthusiastic while playing here.
We can reach this place in 15 minutes by trekking. But if we go by vehicle, it takes 3 hours.
The teacher said the above details
Courtesy :
Tamil The Hindu – Ulaga Masala
Tdh 02.06.2017 football stadium in mid forest
Translated by
My School Students
EZHILARASAN VENKATACHALAM
 e3 institute, salem 9SINGLE MAN CREATES FOREST ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION


Single man creates a forest in Brazil  MIXED உலக மசாலா 0606
வின்சென்ட்டுக்கு ஜே!

பிரேசிலில் உள்ள காடுகளை அழித்து வீடுகளைக் கட்டி வருகிறார்கள்.

In Brazil they are destroying the forests and building houses.

ஆனால் ஒரு நிலத்தை வாங்கி, காட்டை உருவாக்கி இருக்கிறார் 83 வயது அன்டோனியோ வின்சென்ட்.
But an 83 year old man named Antonio Vincent bought land and is building a forest.

“மரங்கள் அடர்ந்த வனப் பகுதியில் தான் என் குழந்தைப் பருவம் கழிந்தது.
மரங்கள் வெட்டுவதையும் மரங்கள் வெட்டியதால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டதையும் கண்டேன்.
He says - "My childhood was spent in a place filled with lot of trees.
I observed that we got water problem due to cutting of trees.

 நம்மால் தண்ணீரை உருவாக்க முடியாது. இருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை கூட மனிதர்களுக்கு இல்லை.
We can't create water. But we don't have enough sense to even preserve the existing water resources.

பிறகு நகருக்கு வந்துவிட்டோம். ஆனாலும் வனத்தையே மனம் தேடிக் கொண்டிருந்தது.
We came to cities later, but our minds are longing to go back to the forests.

கடினமாக உழைத்து, 1973-ம் ஆண்டு 31 ஏக்கர் நிலத்தை வாங்கி, பல்வேறு விதைகளை விதைத்தேன்.

I worked hard in 1973 and bought 31 acres land and planted many trees.

தண்ணீர் ஊற்றி வளர்த்தேன். அருகில் இருந்தவர்கள் இதில் ஒரு பைசா வருமானம் வராது, வெட்டி வேலை என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் கண்டு கொள்ளவில்லை.
I poured water and grew the plants.
Neighbours told this is a stupid thing to do and no money will come from this. But I did not listen to their words.

சில கழுதைகளையும் மனிதர்களையும் உதவிக்கு வைத்துக்கொண்டு இந்தக் காட்டை உருவாக்கினேன்.
I utilized some human beings and donkeys for building this forest.

 ஆரம்பத்தில் விடுமுறை நாட்களில் வந்து வேலை செய்தேன். பின்னர் இதையே என் முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டேன்.

In the beginning, I came here and did my work only in my holidays.
After that I made it as my full time work.

மரங்களிலிருந்து விளையும் பழங்களைச் சாப்பிடுவேன். எலிகளுடனும் நரிகளுடனும் வாழ்ந்தேன். 40 ஆண்டுகளில் இந்தக் காட்டில் 50 ஆயிரம் மரங்களை வைத்திருக்கிறேன்.

I will eat the fruits which grew in trees. I have lived with foxes and rats here. In 40 years I have planted 50 thousand trees.

 ஆரம்பத்தில் தண்ணீர் விடுவதுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. இப்போது சிற்றருவிகளும் குளங்களுமாக 20 தண்ணீர் ஆதாரங்கள் காட்டுக்குள் இருக்கின்றன.

In the beginning supplying water was a big problem.
But now there are 20 streams and ponds in this forest.

 தண்ணீர் வந்தவுடன் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் எல்லாம் காட்டுக்குள் குடிபுகுந்துவிட்டன. பார்ப்பவர்கள் அனைவரும் இதைச் சிறிய மழைக்காடு என்றே அழைக்கிறார்கள்.
After I brought water, animals, birds and insects all came into the forest.
All are calling this a "Small Rainforest".

 நாற்பது ஆண்டுகளில் ஒரு தனி மனிதரால் சிறிய காட்டை உருவாக்க முடியும் என்றால், அரசாங்கம் மனம் வைத்தால் இருக்கிற காடுகளையும் பாதுகாக்க முடியும். புதிய காடுகளையும் உருவாக்க முடியும்.
If in 40 years a single person can build a forest, why can't the government save the existing forests? They can also create new forests.

எல்லோரும் என் குடும்பம் பற்றி விசாரிக்கிறார்கள். என்..குடும்பம் கொஞ்சம் பெரியது. நான் விதைத்து உருவாக்கிய 50 ஆயிரம் மரங்கள் தான் என் பிள்ளைகள்.
All the people are enquiring about my "family". My family is a big one.
The 50 thousand trees that I have planted are my sons.

இந்தப் பூமிக்கு என்னால் முடிந்த நல்ல விஷயத்தை செய்த திருப்தி இருக்கிறது” என்கிறார் வின்சென்ட்.

I am satisfied that I have done a good job to this earth - says Vincent.

வின்சென்ட்டுக்கு ஜே!

நன்றி :

தி இந்து 06.06.2017 
உலக மசாலா

Translated by my 8 th standard Learner and corrected by me
..
Ezhilarasan Venkatachalam
e3 institute
Salem 9.

GOAT EATS CASH ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION


GOAT EATS CURRENCY NOTES

உத்தரபிரதேச மாநிலத்தில் உரிமையாளர் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் ரொக்கப் பணத்தை பசியால் வாடிய ஆடு சாப்பிட்டது. இதனால் அந்த உரிமையாளர் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
In Uttar Pradesh a hungry goat ate the currency notes worth Rs.62,000 . Due to this the owner is immersed in sadness.

உத்தரபிரதேசத்தின் தல்கி ராம் பகுதியில் உள்ள சிலாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் சர்வேஷ்குமார் பால். இவர் செங்கல் வாங்குவதற்காக ரூ.66,000 பணத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந் தார்.
Sarveesh Kumar lives in Silapur, Thalkeram, UP. He had kept Rs.66,000 cash in his pant pocket. He had the intension to buy bricks.

களைப்பு காரணமாக பணத்துடன் ஆடையை கழற்றி விட்டு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது பசியால் வாடியிருந்த அவரது ஆடு, பாக்கெட் டுக்கு வெளியே தெரிந்த அந்த பணத்தை சாப்பிட்டது.
Due to tiredness he removed his clothes along with the cash and placed it in his house. Then he went to have a bath. At that time, his hungry goat started eating the cash that was visible from his pant pocket.

பின்னர் குளித்துவிட்டு வெளியே வந்த சர்வேஷ்குமார், பணத்தை ஆடு சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக ஆடு சாப்பிடுவதை அவர் தடுக்க முயற்சித்தார்.
After taking bath, Sarveesh Kumar was shocked seeing his goat eating his cash. Then he tried to prevent it from eating it.

ஆனால் அதற்குள் ரூ.62 ஆயிரம் பணத்தை ஆடு சாப்பிட்டு விட்டது. கடைசியில் இரு ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே அவருக்கு மிஞ்சியது. அதுவும் கிழிப்பட்ட நிலையில்.
But by that time it had eaten cash worth Rs.62,000. He could only recover two Rs.2,000 rupees notes and in torn condition.

நன்றி :
தி இந்து  08.06.2017 வியாழன்
=========================
Courtesy :
Tamil The Hindu 08.06.2017

Translated by

Ezhilarasan Venkatachalam

Sunday, June 4, 2017

Depression Disease that cripple people / psychology in tamil


வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மனநல உதவிப் பேராசிரியர் மருத்துவர் ஆ.காட்சன் கூறியதாவது:

மன அழுத்தம் என்பது தாழ்வு மனப்பான்மைக்கு நிகரான ஒன்றாக தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் சர்க்கரை வியாதி போல இதுவும் ஒரு நோய்தான். இதனால் வளர் இளம் பருவத் தினரும், 40 வயதுக்கு மேற்பட்டவர் களும் அதிகம் பாதிப்புக்கு உள் ளாகின்றனர். எப்போதும் அதிக மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வு, விருப்பமுள்ள செயல்களில்கூட நாட்டம் இல்லாத தன்மை, தான் எதற்கும் உதவாதவன், வாழ்வதற்கு தகுதியில்லாதவன், இனி வாழ்வ தற்கு வழியில்லை என்ற எண்ணங் கள், தூக்கமின்மை, பசியின்மை, கவனக்குறைவு, தற்கொலை எண்ணங்கள் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

மன அழுத்தம் தீவிரமாகும் போது, குறிப்பாக வயதானவர் களுக்கு தற்கொலை செய்ய தூண்டுமாறு மாயக்குரல்கள் கேட்பது, பிறர் மீது தேவையற்ற சந்தேகம் போன்றவை ஏற்படலாம். தோல்விகள், பிரச்சினைகள் ஏற்படும்போது மட்டுமல்ல, எந்தவித காரணங்களும் இல்லாமல்கூட ஒருவருக்கு மன அழுத்த நோய் ஏற்படலாம்.

மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் எல்லோருக்கும் வெளிப்படையாக இந்த அறிகுறிகள் காணப்படுவதில்லை. சில சமயங்களில் பள்ளி, கல்லூரியை புறக்கணிப்பது, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது, திடீரென்று ஏற்படும் போதைப் பழக்கம்கூட வளர் இளம் பருவத் தினரின் மன அழுத்த நோயின் வெளிப்பாடாக இருக்கலாம்.

காரணமே கண்டுபிடிக்க இயலாத உடல் நோய் அறிகுறி கள், தலைவலி, நரம்புக் கோளாறுகள்கூட வயதானவர் களின் மற்றும் பெண்களின் மன அழுத்த நோயின் அறிகுறிகளாக வெளிப்படலாம். இவ்வாறு பல வகையான மன அழுத்த நோய்கள் இருப்பதால் தகுந்த ஆலோசனை யும், காலம் தாழ்த்தாத சிகிச்சையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவர் ஆ.காட்சன்

சில நேரங்களில் இருதுருவ மன நோய் என்ற பைபோலார் மன நோயின் ஓர் அங்கமாக மன அழுத்த நோய் ஏற்படும். மன அழுத்த நோயால் பாதிக்கப் படுபவருக்குத்தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இவர்கள் வேண்டுமென்றே தங்களை தனிமைப்படுத்திக் ்கொள்பவர்களோ, மனதளவில் பலவீனமானவர்களோ அல்ல. எனவே, தேவையற்ற ஆலோ சனைகளையும், கட்டாயப்படுத்து தலையும் தவிர்த்து சிகிச்சை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கவுன்சலிங் மட்டுமே நிவாரணி அல்ல. மிதமாக மற்றும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மூளை நரம்புகளில் செரடொனின் என்ற வேதியியல் பொருளை சமநிலைப்படுத்தும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பைத்தியம் பிடித்தவர்கள்தான் மனநல மருத்துவரை பார்ப்பார்கள் என்ற தவறான எண்ணம் இன்னமும் பொதுமக்களிடம் நிலவுவதால் காலம் தாழ்த்தி அல்லது தேவையற்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதிக சிக்கல்களுடன் வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Thanks to :
மருத்துவர் ஆ.காட்சன்

April 6, 2017 

depression arresting people psychology in tamil


மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம்
கு.கணேசன்

உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாதான். 2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது.

மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள். ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும். நாள்பட்ட மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்து விடுகிற ஆபத்து நிறைந்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆகவேதான், நடப்பு ஆண்டில் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மருத்துவர்களையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அறிவுறுத்திவருகிறது.

என்ன காரணம்?

மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி, அதிகரித்துவரும் மதுப் பழக்கம், தன் வேலை, தன் வீடு எனும் குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி… இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற மனக்காயங்கள், இளவயதினருக்குக் காதல் தோல்வி, வேலையின்மை அல்லது படிப்புக்கு ஏற்ற வேலையில்லாதது போன்றவை காரணமாகின்றன. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், மோசமான பணிச் சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், குழந்தையின்மை, அடங்காத பிள்ளைகள் என்று பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டுவருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாள்பட்ட நோய்நிலை, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.

பொதுவாக, மன அழுத்தம் அதிகமாகும்போது அது உடல்நலனையும் பல வழிகளில் பாதிக்கும். உடல் இளைப்பது, அஜீரணம், இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, காரணம் தெரியாத உடல் வலி, மனப் பதற்றம், மன பயம், குடல் எரிச்சல் நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, ஆஸ்துமா, தூக்கமின்மை, ஆண்மைக் குறைவு, பாலியல் ஆர்வம் குறைவது போன்ற பல தொல்லைகளுக்கு மன அழுத்தம் வழிவிடும்.

குறுகிய கால மன அழுத்தம் குறித்துப் பயம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், நாள்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் ஆபத்தானவை. அதிகமுறை மன அழுத்தத்துக்கு ஆளாகிறவர்களை மீண்டும் அமைதிநிலைக்குக் கொண்டுவருவது கடினம் இவர்கள் தனக்குத்தானே பேசிக்கொள்வதும், மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பதும், தனிமையை நாடுவதும், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதும் உண்டு. தன்னைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது, வீட்டைவிட்டு ஓடிப்போவது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது போன்றவற்றுக்கு மன அழுத்தம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.

பசி குறைவது அல்லது அதிக பசி, அடிக்கடி கோபப்படுவது/எரிச்சல்படுவது, உறக்கம் குறைவது, பேச்சு, செயல்களில் வேகம் குறைவது, எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, முக்கியமானவற்றில் முடிவெடுக்க முடியாத நிலைமை, தன்னம்பிக்கை இல்லாமல் பேசுவது, பாதுகாப்பற்ற உணர்வு, ஞாபக மறதி, பதற்றமான எண்ணங்கள், மனக் குழப்பம் போன்றவை மன அழுத்த நோயின் முக்கியமான அறிகுறிகள்.

என்ன செய்யலாம்?

உடலும் மனமும் நலமுடன் இருக்க வேண்டு மானால் ஆரோக்கிய உணவு, போதிய ஓய்வு, நிம்மதியான உறக்கம் ஆகியவை மிகவும் அவசியம். எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டுச் செய்யவும் சரியான நேரத்தில் முடித்துவிடவும் பழகிக்கொண்டால் மன அழுத்தத்துக்கு இட மில்லாமல் போகும். அலுவலகப் பிரச்சினைகளை வீட்டுக்குக் கொண்டுவருவதை நிறுத்தினாலே பாதிப் பிரச்சினை சரியாகிவிடும். பிடித்த உறவுகளுடனும் தன்னம்பிக்கை மனிதர்களுடனும் பழகும் நேரத்தை அதிகப்படுத்தினால் மனதிலிருக்கும் சுமை குறையும்.

நம்பிக்கை தரும் வாசகங்கள் படிப்பது, பாடல்களைக் கேட்பது என வழக்கப்படுத்திக் கொண்டால், வாழ்க்கையின் மீது பற்று உண்டாகும். உடற்பயிற்சிக்குத் தினமும் அரை மணி நேரம் ஒதுக்கினால் மூளைக்குள் ‘என்டார்பின்’கள் சுரந்து மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும். நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்திக்கொள்வதும், தினமும் யோகா/தியானம் மேற்கொள்வதும், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதும் மன அமைதிக்கு வழி அமைக்கும்.

தற்போது கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் மன அழுத்தப் பாதிப்பு உள்ளவர்களைக் காண முடிகிறது. என்றாலும், நடைமுறையில் மன அழுத்தம் உள்ளவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே முறையான சிகிச்சைக்கு மனநல மருத்துவரிடம் வருகின்றனர். தங்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே பொதுமருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோர்தான் அதிகம். இன்னொரு புறம், மனக்கோளாறுகளுக்குப் பயந்த கோளாறு, செய்வினைக் கோளாறு, பேய், பிசாசு பிடித்துவிட்டது என்றெல்லாம் மூடநம்பிக்கையில் ஊறிப்போனவர்கள் கிராமங்களில் அதிகம். இவர்களெல்லாம் நோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கே வருகின்றனர். மன அழுத்தத்தை ஆரம்பக்கட்டத்திலேயே கவனித்துவிட்டால், மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் வந்தால் நோயின் தீவிரத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. மன அழுத்தப் பிரச்சினைக்கு மனநல மருத்துவரும் (Psychiatrist) மனநல ஆலோசகரும் (Psychologist) இணைந்து சிகிச்சை கொடுத்தால் மிக விரைவில் நோய் குணமாகும். காரணம், இவர்களுக்கு மாத்திரை மருந்துகளோடு, மன அமைதிக்கு வழி வகுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டியது முக்கியம். இந்த ஆலோசனைகளை மனநல ஆலோசகர்களால்தான் சரியாக மேற்கொள்ள முடியும். ஆனால், இந்தியாவில் மன அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, தேவையான எண்ணிக்கையில் மனநல மருத்துவர்களோ, மனநல ஆலோசகர்களோ இல்லை.

இந்தியாவில் 4 லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மொத்தமே சுமார் 4,000 மனநல மருத்துவர்களும், 1,000 மனநல ஆலோசகர்களும்தான் இருக்கிறார்கள். இதனால், மன அழுத்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குச் சரியான சிகிச்சை கிடைக்காமல் போகிறது. நாளுக்கு நாள் மன அழுத்தப் பிரச்சினை பூதாகரமாகிவரும் இத்தகைய சூழலில் அரசு மருத்துவமனைகளிலும் சரி, தனியார் மருத்துவமனைகளிலும் சரி, இப்போதுள்ள மனநலப் பிரிவுகள் எத்தனை பேருக்குச் சிகிச்சை கொடுக்க முடியும்?

மத்திய - மாநில அரசுகள் இதைக் கவனத்தில் கொண்டு, மன அழுத்த நோயாளிகள் எதிர்கொள்ளும் மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சினைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப் பிரத்யேகமான மனநோய் மையங்கள் தனி இடங்களில் தொடங்கப்பட வேண்டும். மனநல மருத்துவம் மற்றும் மனநல ஆலோசகர் படிப்புக்கான இடங்களை அதிகரித்து, எல்லா மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவரையும் மனநல ஆலோசகரையும் நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அரசுகள் கவனிக்குமா?

Thanks to ;
- கு.கணேசன்,
பொதுநல மருத்துவர்,
  gganesan95@gmail.com