EARTHQUAKE RESIST HOUSES SPOKEN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION






நிலநடுக்க த்தை
தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!
Wonderful houses that can withstand an earthquake. 

ஜப்பானில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் ஸ்டைரோஃபோம் (Styrofoam) வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
In Japan they are building Styrofoam houses that can withstand earthquakes.

ஸ்டைரோஃபோம் என்றவுடன் நாம் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் தட்டு, தம்ளர், பார்சல் கட்டும் தெர்மகோல்தான் நினைவுக்கு வரும்.
Styrofoam may remind you about use and throw tumblers and plates and the thermocol used in packing.

வீடு கட்டக்கூடிய ஸ்டைரோஃபோம் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது. இதில் கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியவை.
Styrofoam used for building houses is something similar, but it is a very advanced material.

விலை குறைந்தவை. வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவை. மிக வேகமாகவும் எளிதாகவும் வீட்டைக் கட்டி முடித்துவிட முடியும்.
They are very cheap and heat resistant. We can build these houses very fast and easily.

கடந்த பத்து ஆண்டுகளாகவே ஸ்டைரோஃபோம் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் மக்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
Though Styrofoam houses had been built for the past ten years, it was not famous.

கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மக்களின் கவனம் இந்த வீடுகள் மீது திரும்பி இருக்கிறது.
After the last year's earthquake it had got the attention of the people.

வீட்டின் எடை 80 கிலோ. பசையால் அரைக் கோள வடிவில் வீடுகள் கட்டப்படுகின்றன.
The total weight of the house is only 80 kgs. It  is built in the shape of an hemisphere.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வகையில் வீட்டின் உத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
The roof of the house had been designed so as to resist a powerful  earthquake.

ஒரே வாரத்தில் மூன்று மனிதர்களால் இந்த வீட்டை உருவாக்கிவிட முடியும். 387 சதுர அடி பரப்பளவும் 9.8 அடி உயரமும் இருக்கிறது.
Three men can construct this house in a time span of one week. Total area of this house is 387 square feet and the height is 9.8 feet.

இந்த வீடு துரு பிடிப்பதில்லை, கரையான்களால் அரிக்கப்படுவதில்லை, நீண்ட காலம் உழைக்கக்கூடியது.
There is no rusting and termites problem in these houses. And it also has a long life.

வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவுவதால் குளிர்சாதன பயன்பாடும் குறைந்துவிடுகிறது. 44 லட்சத்திலிருந்து 55 லட்சம் வரை வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
Since it is cool inside, so power consumption for A.C  is reduced. The cost of this house ranges from 44 lakhs to 55 lakhs.

இதில் நிரந்தரமாகவும் தங்கிக்கொள்ளலாம். அல்லது ஆபத்து ஏற்படும் காலங்களில் மட்டும் தங்கிச் செல்லலாம்.
You can either stay in these houses permanently or can stay temporarily when there is danger.

ஜப்பான் டோம் ஹவுஸ் நிறுவனம் ஆண்டுக்கு 100 ஸ்டைரோஃபோம் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Dome Houses of Japan has planned to sell 100 Styrofoam houses yearly.

நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!
Wonderful houses that can withstand an earthquake !
==========================
Courtesy:
தி இந்து : ஜுன் 15, 2017
உலக மசாலா:

Translated 
by
Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer
Salem

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215