Featured Post

WRITTEN ENGLISH TRAINING THROUGH whatsapp / email how ? Ezhilarasan

எப்படி "வாட்ஸ் ஆப்" மூலம்  அல்லது "ஈ~மொயில்" மூலம்  ஆங்கில எழுத்து பயிற்சி கொடுப்பீர்கள்?. ... ஐயா சற்று விளக்க முடியு...

Friday, September 29, 2017

Good words changed LIFE FREE ENGLISH THROUGH TAMIL GOOD WORDS


A few words that changed a beggar's life.
வாழ்க்கையை மாற்றும் வார்த்தை

நெடும்காலத்துக்கு முன்பாக, காசியில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான்.

Many years ago a beggar live in KAASI.

 கையேந்தி காசு கேட்பதே அவனது வாழ்க்கை. ஒரு நாள் காசிக்கு ஞானி ஒருவர் வந்திருந்தார்.

Begging for alms was his life. Once a wise man came there.

அவரிடம் ‘‘என் வாழ்க்கையை மாற்ற ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’’ எனக் கேட்டான்.

He asked him, "Please give me some advice to change my life".

அதற்கு அந்த ஞானி, ‘‘நாளை முதல் நீ எவரை சந்தித்தாலும் காசு கொடுங்கள் எனக் கேட்பதற்குப் பதிலாக, நன்றாக இருங்கள் என வாழ்த்த வேண்டும்.

He said to the beggar, "From tomorrow instead of asking for money from people, you tell to each person that you see, 'I WISH YOU SUCCESS'  .

இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டால் உன் வாழ்க்கை மாறிவிடும்’’ என்றார்.

If you do this your life will change."

 பிச்சைக்காரனுக்கு நம்பிக்கையில்லை.
But the beggar was doubtful.

 ஆனாலும், ஞானியின் வாக்கை கடைபிடித்துப் பார்ப்போமே என முடிவுசெய்து, மறுநாள் முதல் சாலையில் எதிர்படும் மனிதர்களைப் பார்த்து ‘‘நன்றாக இருங்கள்...’’ என மனதார வாழ்த்தினான்.

Anyway, he decided to implement what the wise man told. So he said to each person he saw on. the road, "I WISH YOU SUCCESS".

ஆரம்பத்தில் அந்த வாழ்த்தொலிக்கு பயன் கிடைக்கவில்லை.

At the start these blessing words did not yield any result.

ஆனால், அடுத்த சில நாட்களில் அவனது செயலை மக்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

But after a few days, people started to note it.

சுபகாரியம் செய்யபோகிறவர்கள் அவன் முன்னால் போய் ஆசி வாங்கினார்கள். காணிக்கை கொடுத்தார்கள்.

Before doing an auspicious thing, they met him and got his blessings.

சில மாதங்களில் அவனது ஆசிர்வாதப் புகழ் பரவியது.

Within a few months his fame became widespread.

வெவ்வேறு ஊர்களில் இருந்து ஆட்கள் அவனைத் தேடி வந்து வாழ்த்துப் பெறத் தொடங்கினார்கள்.

People  started to come from  different towns and cities to get his blessings.

அவனுக்கான உணவும், உடையும், இருப்பிடமும் அவர்களே அமைத்துக் கொடுத்தார்கள்.

They provided him food, dress and shelter at their cost.

இரண்டே இரண்டு நல்ல வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு, அதைத் தொடர்ந்து சொல்லிவந்தால்... வாழ்க்கையில் எவ்வளவு மேம்பாடு ஏற்படுகிறது என்பதைப் பிச்சைக்காரன் உணர்ந்துகொண்டான்.

The beggar realized that just learning a few good words  and then repeatedly telling it had bettered his life. So he was sure, if he continues it he will definitely attain an excellent position in his life.

 ஒரு நல்ல பழக்கம் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதற்கு அந்தப் பிச்சைக்காரனே சாட்சி!

This beggar is an evidence that good habits  can change your whole life!

நன்றி:
தி இந்து~ 19 Sep 2017

Written in Tamil by

எஸ்.ராமகிருஷ்ணன்

Translated into English by

Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem
தமிழ் வழியே ஆங்கில பயிற்சி

..
MENU 
 ..DONATE PLEASE 
..
PLEASE SUBSCRIBE
 TO MY YOUTUBE CHANNEL

Bill Gates part 2 FREE ENGLISH THROUGH TAMIL BILL GATES PART 2

Bill Gates Part 2 (bi-lingual)

சாஃப்ட்வேர் என்னும் மூளை உழைப்புக்கு உரித்தான மரியாதையை வாங்கித் தந்தவர்கள் மைக்ரோசாஃப்ட்தான்.

It was Microsoft who restored the due respect to software development.

அதுவரை, சாஃப்ட்வேர் எழுதியவர்கள் அதை வணிகக் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை.

Till then persons who developed software did not view it with a business perspective.

அதை விற்றுப் பணம் சம்பாதிப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

They never thought of earning money by selling software.

வாடிக்கையாளர்கள் ஓசியில் பயன்படுத்தினார்கள்.

The customers used it free of cost.

பில் இதை மாற்றினார்.
Bill changed this.
  ***
கடுமையாக உழைத்தும், மைக்ரோசாஃப்ட் கல்லாவில் பணம் கொட்டவில்லை.

In spite of working hard, Microsoft did not earn much.

பில் காரணத்தை ஆராய்ந்தார்.
Bill analysed the reason for this.

ஏராளமானோர் திருட்டுத்தனமாக காப்பி செய்து பயன்படுத்திக்  கொண்டிருந்தார்கள்.

Many were copying it illegally and using it.

தன் மூளை உழைப்பைத் திருடுகிறார்கள் என்று பில் மனதில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. An open letter to Hobbyists என்னும் தலைப்பில் பகிரங்கக் கடிதம் எழுதினார்.

Bill could not tolerate people stealing his hardwork and got very angry. He wrote "AN OPEN LETTER TO HOBBYISTS".

 “நீங்கள் கம்ப்யூட்டர் என்னும் ஹார்ட்வேரை பணம் கொடுத்து வாங்குகிறீர்கள். சாஃப்ட்வேரை ஏன் திருடுகிறீர்கள்?” என்று குற்றம் சாட்டினார்.

 "You pay money and get a computer (hardware). But why do you steal the software?" he accused them.
 **
ஐ.பி.எம். பர்சனல் கம்ப்யூட்டர்கள் சூப்பர் ஹிட். 1980 காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு பர்சனல் கம்ப்யூட்டர் பயன்படத் தொடங்கியது.

IBM personal computer became a super hit. In 1980s each home had a personal computer.

MS – DOS என்னும் பெயரில் பில் ஆபரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்தார்.
Bill introduced operating system called "MS~DOS"

அவர் இயக்குதளத்தைப் பயன்படுத்தாத கம்ப்யூட்டரே இல்லை என்னும் அளவுக்கு ஆரவார வரவேற்பு, விற்பனை.
Almost all PC has this operating system. It was a grand success.

1985 – ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 1 என்னும் ஆபரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்தது.

In 1985, Microsoft introduced operating dystem called "Windows 1".

இது கம்ப்யூட்டர்களில் ஆமை வேகத்தில் வேலை செய்தது.
It was very slow in operation.

அடுத்த ஐந்து ஆண்டுகள். ஆமை புயலானது. விண்டோஸ் 3 அறிமுகமானது.

In the next five years a faster operating system  "Windows 3" was introduced.

இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தில் வேகம் மட்டுமல்ல, விவேகமும் அதிகம்.
This operating system was fast and smart.

கடிதங்கள் அடிக்கும் வேர்ட், கணக்குப் போட உதவும் எக்ஸெல், தகவல்களை அழகாக சமர்ப்பிக்க உதவும் பவர் பாயிண்ட் ஆகிய மென்பொருள்கள் இருந்தன.

It  also had 3 other software, WORD for letter drafting, EXCEL for calculations and POWERPOINT for presenting reports and information.
 ***.
2000. பில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ. பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

In 2000, Bill resigned from his CEO post in Microsoft.

பணம் திகட்டிவிட்டதோ? சேர்த்த செல்வத்தால் இல்லாதோருக்கு உதவ வேண்டும் என்னும் ஆசை பிறந்தது.

Perhaps he got fed up with money. He wanted to help the needy with the wealth he had earned.

மனைவி பெயரையும் சேர்த்து, பில் மெலிண்டா அறக்கட்டளை தொடங்கினார்.

He started Bill Melinda Trust adding his wife's name to the trust.

 2008-ம் ஆண்டு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலிருந்தும் முழுமையாக விலகினார்.

In 2008, he got himself relieved from all important posts of the company.

ஓய்வு பெற்றதும் பில் சொன்னார், “நான் கடற்கரையில் சும்மா உட்காருபவனல்ல.” சொன்னபடியே, அறக்கட்டளையின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

After retirement Bill said, "I am not going to be idle and relax in beaches". As he had mentioned, he was very active doing his trust work.

 ”தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதுபோல்,

As if to acknowledge the Tamil saying, "DESTROY THE WORLD, EVEN IF A SINGLE MAN HAS NO FOOD TO EAT",

அடுத்த தலைமுறையில் இல்லாதவர்களை இல்லாமல் செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் குறிக்கோள்.

 The aim of his trust was to remove poverty from the world.

இதற்காகக் கல்வி மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம், தொற்று நோய்கள் தடுப்பு எனப் பல்வேறு துறைகளில் உலகின் பல நாடுகளில் முயற்சிகள் எடுத்து வருகிறார்.

For this he started many social service activities in many countries in areas like education improvement, women's upliftment, health services improvement and infectious disease prevention and other schemes.
***
சம்பாதிப்பது ஒரு கலை.  அதைச் சமூகச் சிந்தனையோடு செலவிடுவதும், பள்ளத்தில் வீழ்ந்தோரைக் கை தூக்கி விடுவதும் அதைவிடப் பெரிய கலை.

Earning is an art.  Spending the earned money with social commitment to uplift the downtrodden is ever a more difficult art than.

பில் கேட்ஸ் இரண்டிலும் கில்லாடி.
Bill his an expert in both.

எஸ். எல். வி. மூர்த்தி,

slvmoorthy@gmail.com
..
நன்றி :

தி இந்து  19 Sep 2017
தொழில் முன்னோடிகள்:  PART 2 TINY

For full article..

http://tamil.thehindu.com/business/article19713851.ece
.
Collected and translated into English by

Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem.

தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
..
MENU 

 EZHILARASAN VENKATACHALAM 

Thursday, September 28, 2017

Thanthi Responsible Son FREE ENGLISH TRAINING THROUGH TAMIL THANTHI 2016

A Responsible Son Translation Thanthi 2016
(Pain there, happiness here)
வலி அங்கே .. மகிழ்ச்சி இங்கே ..

நான் கடைத் தெருவிற்கு சென்றிருந்த போது ஓரு இளைஞர் மூன்று சக்கர சைக்கிளில் அட்டைப் பெட்டி  பார்சல்களை  வைத்து தள்ளிக் கொண்டு வந்தார்.

When I had been to the market, I happen to see a person pushing a tricycle with some cardboard boxes in it.

அதை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காரணம் அவர் டிப்ளமோ படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் சூப்ரவைசராக பணி புரியும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்.

 I was shocked to see that, because he was a diploma qualified person of our area, who was working as a supervisor in a private company.

வியர்க விறுவிறுக்க வந்த அவர் அருகில் சென்று, "உங்கள் வேலை என்னாச்சு? படித்த நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  வந்துவிட்டீர்கள்?"  என்று கேட்டேன்.

I went near that person who was sweating terribly and asked, "What happen to your job? Being an educated person, why did you join this type of job ".

அதற்கு அவர், "நான் அந்த வேலையில் தான் இருக்கிறேன். எங்க அப்பாவிற்கு இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை.

He said, "Of course, I am in the same job. For the last two days my father is sick.

அவர் சில கடைகளுக்கு ரெகுலராக பொருட்களை சப்லை செய்து வருகிறார்.

He had been regularly supplying some goods to a few shops.

எவ்வளவு சிரமமாக இருந்தாலும் சரியான நேரத்தில் பொருட்களை கொண்டு போய்  கடைகளில் சேர்த்து விடுவார்.

Whatever problem he may face in life, he never failed to deliver the goods to the shops in time.
பொருட்கள் போய் சேராவிட்டால் அந்த கடைகளில் வியாபாரம்  பாதிக்கப்படும்.

If the goods didn't reach the shops in time, their business will get affected.

என் தந்தை உடல் நிலை சிரியில்லாத போதும் அதை நினைத்து வருந்திக் கொண்டு இருந்தார்.

My father, though he was sick, was worried about the goods despatch.

அதனால் நானே பொறுப்பாய் கொண்டு போய்  பொருட்களை சேர்த்து விடுகிறேன்.  நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்றபடி , பார்சல்களை கொண்டு போய்க் கொண்டுடிருக்கிறேன்.

So I am myself doing it with great care. Now my father need not worry about it.

எனக்கு இது புது அனுபவம் என்பதால்  வியர்த்து வழிகிறது.

Since this is a new job for me, I am sweating more.

இன்னும் ஒரு மணி நேரத்தில்  இந்த வேலை முடிந்துவிடும்.

In one hour time this job will get over.

பின்பு வீட்டிற்கு சென்று உடை  மாற்றி விட்டு, என் அலுவலக பணிக்குப் போய் விடுவேன்", என்றார்.

Then I will go home, change my dress and go to my office.

அந்த இளைஞனின் செயலை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

The youth's action made me feel proud of him.

நன்றி :

தினத்தந்தி .. குடுப்ப மலர் (2016)

Translated into English
by

Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem.
ENGLISH MADE EASY
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
..MENU 
 ..DONATE PLEASE 
..
PLEASE SUBSCRIBE
 TO MY YOUTUBE CHANNEL

Wednesday, September 27, 2017

Finland's school FREE SPOKEN ENGLISH THROUGH TAMIL FINLAND'S SCHOOLS

 Finland stands first in offering the
world's best education BIL
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

Finland stands first in offering the
world's best education.

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

Let us see what is special in Finland's education system.

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது.

In Finland, they send a child to school only at the age of 7.
 ***
👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்ககள் தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை.

For the next three years, they attend school only for half of the year and the rest of the days are holidays.

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான்.

The school working hours is also less.

அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.

And even in that time span, equal importance is given to others arts like music, painting, sports etc.

*** important ***
👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும்.

There is a rest room in each school.

படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

If the children dont like to attend the class or feel tired, they can go there and take rest.

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...  பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

Till 13 years, there is no ranking system, progress reports etc and of course, parents need not worry about signing on them.

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

If the parents are interested in knowing about their child's performance at school, they will have to submit a requisition letter and then get the details.

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

Since there is no competition in studies, therefore there is no pressure on the students to get high marks.

 சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...
The attitude of considering co-students  as competitors in not there.

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

There is no home work at all for students.

** important ***
👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

Students can do homework on any subject they like to do and bring.

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார்.

There will be a doctor in each school.

 அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

He will individually check up each student and give advices.

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்;

There can  be only a maximum of 600 students in a school.

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

There are no private schools at all in Finland. All the schools are run by the government.

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.

So, 99 %  of the children get their primary education.

அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்.

And 94% of them opt for higher education.

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்.

However, these students who study in  a primary system without exams, always stand first in many international exams.

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் "பின்லாந்து" எப்போதும் முன்னணியில் இருக்கிறது.

Every year the UNITED NATIONS is releasing a rank list of the happiest children in the world. And Finland always tops the list.

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.

It is of course natural that children who are happy to show lot of interests in learning new things.

👍 பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.

Foreign educators and officials throng Finland to know more about their unique education system.

உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்.

About 15,000 people from 56 countries visit Finland every year.

நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

They earn a substantial amount of foreign exchange from this.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது.

In Finland, a teacher's job commands a respect equivalent to IAS, IPS in our country.

அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

Teachers play an important role in the formation of governments policies and their implementation too.

 மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்..

A third of the children dream of becoming a teacher in their lifetime.

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

At the same time, becoming a teacher here is not an easy job.

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

The toppers of the high school students are selected for teacher training.

ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.

First they will have to undergo 5 years of vigorous training in a boarding school.

பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி.

Then they should undergo 6 months of military training.

ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி.

For one year they should undergo direct classroom teaching training in different schools.

ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்.. குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது.

Then they should do a Project from a subject. They should also participate in children's rights workshops.

நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்.

And get certificates from National Boards regarding the Laws of the country.

தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று.

And get certificates relating to fire fighting, self defense and first aid.

என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்.

A person should spend around 7 years for becoming a teacher.

இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...
.
It is this exceptional training given for a teacher that had helped them bring about extraordinary changes in education.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

Let us learn from Finland's education system and try to change to a better system.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

And bring about a better future for our children.

நன்றி :

செந்தில் மெடிக்கல்ஸ், செவ்வாய்ப்பேட்டை
சேலம், தென் இந்தியா.

Collected by

Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem
English training though Tamil
.. 

Sunday, September 17, 2017

Bill Gates Part1 Translation FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BILL GATES

Bill Gates   (Bi-lingual)
 .. Pioneers in Business
..
 தொழில் முன்னோடிகள்: பில் கேட்ஸ் (1955)

 "நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது."  - பில் கேட்ஸ்

"Good decisions come from experiences. And experiences come from making WRONG DECISIONS." ~Bill Gates.

உலகம் இதுவரை, பல்லாயிரம் பிசினஸ் மேதைகளைச் சந்தித்திருக்கிறது.

பில் கேட்ஸைவிடத் திறமையான கண்டுபிடிப்பாளர்கள், நிர்வாக மேதைகள், கஸ்டமர்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாய்க் கணிப்பவர்கள் ஏராளம், ஏராளம்.

The world had see thousands of business geniuses better than Bill Gates in intelligence, administrative skills and the talent to read the customer's pulse.

ஆனால், பணம் கொட்டும் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைத் துரத்தித் துரத்திக் காசாக்குவதிலும் பில் கேட்ஸை மிஞ்ச ஆளே கிடையாது.

But there is none to beat Bill Gates in predicting a business opportunity and chasing it undaunted and converting it into money.

இதனால்தான், கடந்த 23 வருடங்களாகத் தயாரிக்கப்பட்டு வரும் உலகக் கோடீஸ்வரர்களில் பட்டியலில் 19 வருடங்களாக முதல் இடம் பிடித்து வருகிறார்.

This is the reason why he  is on the top of the world's richest men list for the past 19 years out of 23 years.

****

1955. அக்டோபர் 28. அமெரிக்க சியாட்டில் நகரத்தில் வசித்த வில்லியம், மேரி தம்பதிகளின் மகன் வில்லியம் ஹென்றி கேட்ஸ் 3.
***
He was born in 1955 in Seattle, USA. His parents were William and Mary and was named William Henry Gates 3.

அம்மா, அப்பாவை அறிவியல் தொடர்பான கேள்விகளால் துளைத்தான். அவர்கள் புத்தகங்களை அவனுக்கு அறிமுகம் செய்தார்கள்.

He used to bombard or pester his parents with many science related questions. So his parents introduced him to books.

படிப்போ படிப்பு. ஒவ்வொரு பள்ளி விடுமுறையின்போதும், முப்பது அறிவியல் புத்தகங்கள் படித்து முடித்துவிடுவான்.

Soon he became a bookworm. In each school summer holidays period, he would finish reading about 30 scientific books.

என்சைக்ளோப்பீடியா எப்போதும் அருகிருக்கும் துணையானது.

He will always have an Encyclopedia by his side.

பில்லுக்குப் பத்து வயதானது. பள்ளியில் சக மாணவர்களோடு பழகமாட்டான், விளையாடப் போகமாட்டான்.

When Bill was ten years, he would not  mingle with other students or play any games.

படிப்பில் கடைசி பெஞ்ச். மணிக்கணக்காக விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பான். கேட்டால், “யோசிச்சுக்கிட்டிருக்கேன்” என்பான்.

He will sit in the last bench staring at the ceiling for hours together. When questioned what was he doing, he will say, " I AM THINKING".

மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள். பரிசோதித்த அவர் சொன்னார் ``பில் அதி புத்திசாலி. சுற்றியிருக்கும் உலகம் அவன் வேகத்துக்கு இயங்க மறுக்கிறது. அதனால்தான், தனிமையில் இனிமை தேடுகிறான்.”

 He was taken to a psychiatrist. After checking up, he said Bill Gates is a genius. The world is not moving at his desired speed, so he gets bored up. And so he enjoys being alone."

 ***
இன்று பில் கேட்ஸ் சொத்து 87 பில்லியன் டாலர்கள்; பால் ஆலென் சொத்து 20 பில்லியன் டாலர்கள்.

Today the total value of the property owned by Bill Gates is 87 billion dollars. And his partner's property is worth only 20 billion dollars.

இருவரும் தொடங்கிய கம்பெனி மைக்ரோசாஃப்ட். அப்புறம், ஏன் இத்தனை சொத்து வித்தியாசம்?
You may ask why is there a difference,  because they were the joint founders of  Microsoft.

பில் செய்த சின்ன ட்ரிக். கம்பெனி தொடங்கியபோது பில் நண்பரிடம் சொன்னார், “உனக்கு வேலை இருக்கிறது. நான் முழுநேரமாக பிசினஸைப் பார்த்துக்கொள்கிறேன். ஆகவே, எனக்கு 60 சதவீதம், உனக்கு 40 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம்.” பால் ஆலென் சம்மதித்தார்.

Bill did a small trick. While they started Bill told his friend, PAUL ALLEN,  "See you already have a job and I will take care of our business full time. So I will take 60% share of the profits and you take 40%."  He agreed and that is why the difference.
இதுதான் பில்லின் தனித்துவ சாமர்த்தியம்!

That is  Bill Gates' unique business talent !!

எஸ். எல். வி. மூர்த்தி

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

நன்றி:

தி இந்து ..12 Sep 2017
தொழில் முன்னோடிகள்

Translated into ENGLISH
by

Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem.
English training through Tamil

For full article in Tamil

http://e3general.blogspot.in/2017/09/free-english-training-through-tamil_11.html
..
MENU 

 EZHILARASAN VENKATACHALAM 

Tuesday, September 12, 2017

Bitll Gates Part 1 FREE ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN BILLGATES

பில் கேட்ஸ் (1955) Part 1

"நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது."

- பில் கேட்ஸ்

உலகம் இதுவரை, பல்லாயிரம் பிசினஸ் மேதைகளைச் சந்தித்திருக்கிறது. பில் கேட்ஸைவிடத் திறமையான கண்டுபிடிப்பாளர்கள், நிர்வாக மேதைகள், கஸ்டமர்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாய்க் கணிப்பவர்கள் ஏராளம், ஏராளம். ஆனால், பணம் கொட்டும் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைத் துரத்தித் துரத்திக் காசாக்குவதிலும் பில் கேட்ஸை மிஞ்ச ஆளே கிடையாது. இதனால்தான், கடந்த 23 வருடங்களாகத் தயாரிக்கப்பட்டு வரும் உலகக் கோடீஸ்வரர்களில் பட்டியலில் 19 வருடங்களாக முதல் இடம் பிடித்து வருகிறார்.

****

1955. அக்டோபர் 28. அமெரிக்க சியாட்டில் நகரத்தில் வசித்த வில்லியம், மேரி தம்பதிகளின் மகன் வில்லியம் ஹென்றி கேட்ஸ் 3. ஆமாம், இதுதான் பில் கேட்ஸின் முழுப் பெயர். அப்பா பிரபல வக்கீல். அம்மா பள்ளி ஆசிரியை. பள்ளியில் சேர்த்தார்கள். பையனுக்குப் படிப்பில் விருப்பமே இல்லை. மகன் உதவாக்கரையோ என்று பெற்றோருக்குக் கவலை.

பில் வயது ஏழு. சியாட்டிலில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பொடியனுக்கு வேடிக்கை காட்ட அம்மா கூட்டிக்கொண்டு போனார். நடந்தது ஆச்சரியம். ஒவ்வொரு ஸ்டாலாகப் போனான். அவர்களைக் கேள்விகளால் துளைத்தான். “இதிலாவது ஈடுபாடு காட்டுகிறானே” என்று பெற்றோருக்குக் கொஞ்சம் ஆறுதல்.

அம்மா, அப்பாவை அறிவியல் தொடர்பான கேள்விகளால் துளைத்தான். அவர்கள் புத்தகங்களை அவனுக்கு அறிமுகம் செய்தார்கள். படிப்போ படிப்பு. ஒவ்வொரு பள்ளி விடுமுறையின்போதும், முப்பது அறிவியல் புத்தகங்கள் படித்து முடித்துவிடுவான். என்சைக்ளோப்பீடியா எப்போதும் அருகிருக்கும் துணையானது.

பில்லுக்குப் பத்து வயதானது. பள்ளியில் சக மாணவர்களோடு பழகமாட்டான், விளையாடப் போகமாட்டான். படிப்பில் கடைசி பெஞ்ச். மணிக்கணக்காக விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பான். கேட்டால், “யோசிச்சுக்கிட்டிருக்கேன்” என்பான்.

மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள். பரிசோதித்த அவர் சொன்னார் ``பில் அதி புத்திசாலி. சுற்றியிருக்கும் உலகம் அவன் வேகத்துக்கு இயங்க மறுக்கிறது. அதனால்தான், தனிமையில் இனிமை தேடுகிறான்.”

பள்ளிக்கூடத்தை மாற்றினாலாவது பையன் திருந்துவானா என்று பெற்றோர் யோசித்தார்கள். லேக்சைட் என்னும் புகழ் பெற்ற பள்ளியில் சேர்த்தார்கள். அங்கும் முதலில் இதே கதைதான். ஆனால், கொஞ்ச நாட்களில் ஒரு மாற்றம். காரணம், கம்ப்யூட்டர்.

1960-ம் ஆண்டு காலகட்டத்தில் கம்யூட்டர்கள் கம்பெனிகளும், உயர்மட்டத்தவர்களும் பயன்படுத்திய கருவியாக மட்டுமே இருந்தது. லேக்சைட் பணக்காரக் குழந்தைகள் படித்த பள்ளி. ஆகவே, அங்கு கம்ப்யூட்டர் இருந்தது. ஆனால், ஒரு சில மாணவர்களே பயன்படுத்தினார்கள்.

பில், பேசிக் என்னும் கணினி மொழி படித்தான். கம்ப்யூட்டரில் சின்னச் சின்ன புரோக்ராம்கள் செய்யத் தொடங்கினான். அப்பாடா, மனதுக்குப் பிடித்த ஒரு காரியத்தை முதன் முதலாகக் கண்டுபிடித்துவிட்டான். விருப்ப விளையாட்டு வெறிபோலானது. இரவில் வீட்டுக்குத் தெரியாமல் பள்ளிக்கூடம் போவான். வாட்ச்மேன் தயவில் பள்ளிக் கம்ப்யூட்டரைத் தட்டுவான்.

ஒரு நாள். திடீரென, லேக்சைட் ஸ்கூல், மாணவர்களுக்குத் தரும் இலவசக் கம்ப்யூட்டர் சேவையை நிறுத்தியது. கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. அத்தனை பணம் செலவிட பில்லுக்கு விருப்பமில்லை. கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன் (CCC) என்னும் நிறுவனத்திடம் போனான். அவர்கள் இன்னொரு நிறுவனத்திடம் கம்ப்யூட்டர் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஏதாவது பிரச்சனை வந்தால், வாடகை தரவேண்டாம். பில் CCC – உடன் டீல் போட்டான். அவன் கம்ப்யூட்டரில் பிரச்சனைகளை உருவாக்குவான். CCC – க்கு வாடகை மிச்சம். பதிலாக, பில்லுக்கும், நண்பர்களுக்கும் கட்டணம் இல்லாமல் கம்ப்யூட்டர் உபயோகிக்க அனுமதி தந்தார்கள். வெற்றிகரமாகச் சில மாதங்கள் ஓடின. வந்தது சோதனை. CCC நஷ்டம் கண்டது. மூடியது.

பில் மனதில் எப்போதுமே, அதீத தன்னம்பிக்கையும், சுய பிம்பமும் உண்டு. வயது 16. மூன்று நண்பர்களோடு சேர்ந்து, Lakeside Programmers Group என்னும் கம்பெனி தொடங்கினான். இன்ஃபர்மேஷன் சயின்சஸ் என்னும் நிறுவனம், தங்களுக்கான மென்பொருளை வடிவமைக்கும் பணியைத் தந்தது. முடித்துக் கொடுத்தார்கள். கை நிறையப் பணம். கம்ப்யூட்டரை அவர் வயதுப் பையன்கள் விளையாட்டு சாதனமாகப் பார்த்தபோது, பில் மூளை பிசினஸாகப் பார்த்தது.

1970. அமெரிக்காவின் பல நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எந்தெந்த நேரங்களில் போக்குவரத்து அதிகம் என்று கண்டுபிடிக்க, அரசு ஒரு சிறு கருவி, காகித டேப் கொண்ட கறுப்புக் குழாயை முக்கிய வீதிகளில் வைத்தார்கள். ஒவ்வொரு வாகனம் குழாய் மேல் ஏறும்போதும், டேப்பில் ஒரு துளை விழும். இந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் பதிவு செய்யவேண்டும். பணம் என்றால் பறந்துவரும் பில் இந்தப் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டான். நல்ல வருமானம்.

கால்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, பில் மனம் எப்போதும் எதிர்காலத்தில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில். பால் ஆலென் என்னும் சக மாணவனோடு கை கோர்த்து, Traf – O – Data என்னும் கம்பெனி தொடங்கினான். ஒரு எந்திரம் கண்டுபிடித்தார்கள். இதில், காகித டேப்களை ஒரு முனையில் சொருகினால், மறு முனையில் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். நல்ல விற்பனை. அரசாங்கத்தின் சில கொள்கை மாற்றங்களால், ஆர்டர்கள் வரத்து நின்றது. கம்பெனி மூடியது.

பதினேழு வயதுக்குள் இத்தனை பிசினஸ் ஏற்ற இறக்கங்கள்.

படிப்பில் கவனம் செலுத்த பில் முடிவு செய்தார். அமெரிக்கக் கல்லூரிகளுக்கான Scholastic Aptitude Test (SAT) என்னும் நுழைவுத் தேர்வு எழுதினார். 1600 – க்கு 1590 மார்க்! (10 மார்க்கை எங்கே தவற விட்டோம் என்று பில் கவலைப்பட்டிருக்கலாம். அவர் அப்படிப்பட்ட ஆசாமி.)

பிரபல ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அப்பா வழியில் தொடரும் ஆசையோடு சட்டப் படிப்பு. வகுப்பைவிட, கம்ப்யூட்டர் அறையில் அதிக நேரம் செலவிட்டார். இந்தக் காலகட்டத்தில், பழைய பங்காளி பால் ஆலெனோடு நட்பு தொடர்ந்தது. அவர் ஹனிவெல் என்னும் பிரபல கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். பிசினஸ் நடத்தியவர்கள் எப்போதும், ரத்தம் குடித்த புலி மாதிரி. மனம் எப்போதும், பிசினஸ் பின்னால் அலையும். பில் அலைந்தார்.

1975, பில் வயது 20. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் வருடப் படிப்பு. பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் என்னும் பத்திரிகையில், MITS என்னும் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த புதிய கம்ப்யூட்டர் பற்றிய அட்டைப்படக் கட்டுரை. கம்ப்யூட்டர் விரைவிலேயே கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கருவியாகப் போகிறது என்று பில் கணித்தார். இந்த வாய்ப்பைத் தவற விட்டுவிடக்கூடாது.

MITS நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார்.

”உங்கள் கம்ப்யூட்டர் பிரமாதமாக இருக்கிறது. அதில் பேசிக் மொழியைப் பயன்படுத்த முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.”

MITS தொடர்பு கொண்டார்கள். பில் ஒரு ரீல் விட்டார், “உங்கள் கம்ப்யூட்டருக்கான பேசிக் மொழி எங்களிடம் தயாராக இருக்கிறது.”

வரச் சொன்னார்கள். பில் போனார். ஒரு மாத அவகாசம் வாங்கிக்கொண்டு வந்தார். அவரும், பால் ஆலெனும் இரவு பகலாக உழைத்தார்கள். பணியை வெற்றிகரமாக முடித்தார்கள். அசந்துபோன MITS இருவருக்கும் முழுநேர வேலை கொடுத்தார்கள். பில் வசதியான குடும்பம். சொந்தக் காலில் நிற்க முடிவு செய்தார். பால் ஆலென் வேலையில் சேர்ந்தார்.

இருவரும் பிசினஸ் முயற்சியைத் தொடர முடிவு செய்தார்கள். படிப்பையும், வளரும் பிசினஸையும் சேர்த்துச் சமாளிக்க முடியாது என்று பில் உணர்ந்தார். படிப்பை விட்டார். 1975. ஏப்ரல் 4. மைக்ரோசாப்ட் பிறந்தது. மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்காக சாஃப்ட்வேர் தயாரிக்கும் கம்பெனி என்பதால் இந்தப் பெயர்.

இன்று பில் கேட்ஸ் சொத்து 87 பில்லியன் டாலர்கள்; பால் ஆலென் சொத்து 20 பில்லியன் டாலர்கள். இருவரும் தொடங்கிய கம்பெனி மைக்ரோசாஃப்ட். அப்புறம், ஏன் இத்தனை சொத்து வித்தியாசம்? பில் செய்த சின்ன ட்ரிக். கம்பெனி தொடங்கியபோது பில் நண்பரிடம் சொன்னார், “உனக்கு வேலை இருக்கிறது. நான் முழுநேரமாக பிசினஸைப் பார்த்துக்கொள்கிறேன். ஆகவே, எனக்கு 60 சதவீதம், உனக்கு 40 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம்.” பால் ஆலென் சம்மதித்தார்.

இதுதான் பில்லின் தனித்துவ சாமர்த்தியம்!

எஸ். எல். வி. மூர்த்தி

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

நன்றி:

தி இந்து ..12 Sep 2017

தொழில் முன்னோடிகள்

Collected
By

Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem.
English training through Tamil
..
MENU 

 EZHILARASAN VENKATACHALAM 

Monday, September 11, 2017

katralai medu Govt school FREE ENGLISH TRAINING THROUGH TAMIL SCHOOL

ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் வழங்கும் அதிசயம்:

தனித்தன்மையோடு மிளிரும் கற்றாழைமேடு அரசு பள்ளி மாணவர்கள்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் கற்றாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ளது கற்றாழைமேடு எனும் குக்கிராமம். இந்த மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதி. போக்குவரத்துக்கு ஏற்ற சாலையோ, பேருந்து வசதியோ கிடையாது. அத்தியாவசியத் தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கான கடைகூட இந்த ஊரில் கிடையாது. வீடுகள், வயல்கள், ஒரு கோயில் தவிர அந்த கிராமத்தில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மட்டுமே.

விவசாயக் கூலி வேலைக்காக வெளியே செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கான ஓர் இடமாக மட்டுமே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கருதி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் 2008-ம் ஆண்டு கற்றாழைமேடு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சலீம் பாபு பொறுப்பேற்றார். அதன்பிறகு இந்த அரசு தொடக்கப் பள்ளி ஒரு முன்மாதிரி அரசுப் பள்ளியாக முன்னேறத் தொடங்கியது.

ஊர் மக்களிடம் ஆசிரியர்கள் பேசியதன் பலனாக, பள்ளிக்கென ஓர் இடம் தானமாகப் பெறப்பட்டது. அந்த இடத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புத்தம் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. டீக்கடைகூட இல்லாத ஊர் என்பதால் பள்ளிக் கட்டிட கட்டுமானப் பணிக்கு வெளியூர் தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. இதனால், ஊர் மக்களே கல், மண் சுமந்து பள்ளிக் கட்டிடத்தை கட்டி முடித்தனர். மேலும், பொதுமக்கள் அளித்த நன்கொடையால் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் ரூ.2 லட்சம் மதிப்பில் உருவானது.

தலைமை ஆசிரியர் சலீம் பாபு, கிராமத்தின் சிறுவர்களிடம் தொடர்ந்து பேசி படிப்பின் மீது அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கினார். படித்து முன்னேற தொடர்ந்து வழிகாட்டினார்.

கடந்த காலங்களில், பலரும் தொடக்கப் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்றனர். அந்த நிலைமை தற்போது பெருமளவில் மாறியுள்ளது. எந்த மாணவரும் படிப்பை பாதியில் விடாமல் தொடர்ந்து படிக்கின்றனர்.

கிராமத்து மாணவர்களிடம் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கும் இந்தத் தொடக்கப் பள்ளியே காரணமாக உள்ளது. தொடக்கப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தினமும் குளித்து, தலைவாரி நேர்த்தியாக உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். நேரமின்மை, உரிய வசதியின்மை போன்ற காரணங்களால் சில மாணவர்கள் நேர்த்தியாக வர இயலாத நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு பள்ளியிலேயே எண்ணெய், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி ஆகியவற்றுடன் கூடிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் மிகுந்த நேர்த்தியோடு காணப்படுகின்றனர். புதன்கிழமைதோறும் வெள்ளைச் சீருடை, டை, பெல்ட் என தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு நிகராக இந்தப் பள்ளியின் குழந்தைகள் காட்சியளிக்கின்றனர்.

பள்ளியின் வளர்ச்சிக்கு கிராம மக்களின் பங்களிப்புதான் மிக முக்கிய காரணம் என்று ஆசிரியர்கள் பெருமிதத்தோடு கூறுகின்றனர். பள்ளிக்குத் தேவையான பல வசதிகளைக் கிராம மக்கள் செய்து கொடுத்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, ஒலிபெருக்கி சாதனங்கள், விளையாட்டு உபகரணங்கள் என பல வசதிகள் இப்பள்ளியில் உருவாக கிராம மக்கள் உதவியுள்ளனர்.

இவ்வாறு பல்வேறு வசதிகள் பெருகியதன் காரணமாக, மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதோடு, அவர்களது கற்றல் திறனும் மேம்பட்டிருப்பதாக தலைமை ஆசிரியர் சலீம் பாபு கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:

எங்களது கற்றாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இப்போது அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால் மாணவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த ஆர்வத்தோடு பள்ளிக்கு வருகின்றனர். இங்கு தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே உள்ளன. தமிழ்வழியில் படித்தாலும் 5-ம் வகுப்புக்குப் பிறகு தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் பலரும் சேருகின்றனர். ஆங்கிலம் உட்பட எல்லா பாடங்களிலும் அவர்களது கற்றல் திறன் மேம்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

வெறும் பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்கள் மட்டுமின்றி, வாழ்க்கைக் கல்விக்கான பல அம்சங்களும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. வங்கிகளில் பணம் செலுத்தும் நடைமுறை, அஞ்சலக நடைமுறை, அழைப்பிதழ்கள் தயாரிக்கும் முறை, ஒரு நிகழ்வை செய்தியாக தொகுத்து எழுதும் திறன் என வாழ்க்கைக்கு தேவையான பல பயிற்சிகள் தொடக்கப் பள்ளி நிலையிலேயே மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

மேலும், மாணவர்களிடம் தலைமைப் பண்மை வளர்ப்பதற்கான ஏற்பாடுகளும் இங்கு உள்ளன. சுகாதாரக் குழு, தோட்டம் பராமரிப்புக் குழு, கழிப்பறை கண்காணிப்புக் குழு, குடிநீர் பாதுகாப்புக் குழு என பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒரு குழுவில் இடம்பெற வேண்டும். இதனால், ஒரு செயலை திட்டமிட்டு சிறப்பாக செய்யும் ஆற்றலும், குழுவாக சேர்ந்து செயல்படும் ஆற்றலும், தலைமைப் பண்பும் மாணவர்களிடம் வளர்கின்றன.

பள்ளியில் கழிப்பறைக்கு செல்வதற்காக தனியாக காலணிகள் உள்ளன. கழிப்பறை செல்லும் மாணவர்கள் அந்தக் காலணிகளை அணிந்துதான் செல்ல வேண்டும். கழிப்பறை சென்று வந்த பிறகு கைகளைச் சோப்பு போட்டு கழுவிய பிறகுதான் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். அதேபோல, உணவு இடைவேளையின்போதும் மாணவ, மாணவிகள் அனைவரும் சோப்பு போட்டு கை கழுவிய பிறகே சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளியில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று தரப்படுகிறது. அந்த கன்று உடனடியாக நடப்படும். அந்த மாணவர் பள்ளியைவிட்டுச் செல்லும்வரை தினமும் தண்ணீர் ஊற்றி அந்த மரக்கன்றைப் பராமரிப்பது அவரது பொறுப்பு. மரங்களுக்கு இடையே காய்கறித் தோட்டம் அமைத்து, அதன்மூலம் கிடைக்கும் காய்கள், சத்துணவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மாணவர்கள் தினமும் மதியம் அரை மணி நேரம் தமிழ் செய்தித்தாள்கள் படித்து, அவரவருக்குப் பிடித்தமான செய்தி குறித்து சக மாணவர்களுடன் குழு விவாதம் செய்கின்றனர். இதனால் வாசிக்கும் திறன், கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடும் திறன் ஆகியவை அதிகரிக்கின்றன.

பல்லாங்குழி, கல்லாங்காய், ஆடு புலி ஆட்டம், கோலி குண்டு, பம்பரம் சுற்றுதல், ஊஞ்சல் ஆடுதல், கிட்டிபுல், கவட்டை பெல்ட் கொண்டு குறிபார்த்து அடிப்பது ஆகிய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த விளையாட்டுகளால் மாணவர்களிடம் மன அமைதி அதிகரிக்கிறது. கவனச் சிதறல் தடுக்கப்படுகிறது. கை, விரல், கண் ஆகிய உறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது என்றார்

தலைமை ஆசிரியர்.

ஏட்டுக் கல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய பயிற்சிகளும் இப்பள்ளியில் வழங்கப்படுகின்றன. இதனால், இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையோடும், தனித்தன்மையோடும் மிளிர்கின்றனர்!

 தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 90928 41161.

அ.சாதிக் பாட்சா

 நன்றி :

தி இந்து 11 Sep 2017

Collected
By
Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem
ENGLISH TRAINING THROUGH TAMIL
..
MENU 

 EZHILARASAN VENKATACHALAM 

Friday, September 8, 2017

Fish can not climb tree / Psychology in Tamil EZHILARASAN CHILDCARE 0809

மரமேறாத மீன்கள்!

ஆர்.விஜயசங்கர்

‘எல்லோருமே ஜீனியஸ்தான். ஒரு மீனின் திறமையை அது மரமேற முடியுமா என்கிற அடிப்படையில் நிர்ணயம் செய்தால், வாழ்நாள் முழுவதும் தான் மரமேறத் தெரியாத முட்டாள் என்ற எண்ணத் துடனேயே வாழும். ’அறிவியல் மாமேதை ஐன்ஸ்டைன் இந்த வரிகளை எழுதவில்லை என்கிற வாதம் இன்றும் இருக்கிறது. அது நடக்கட்டும். ஆனால், இந்த வலிமை மிகு வரிகளின் உண்மை இன்று நம்மைத் தாக்குவதற்குக் காரணம், அனிதாவின் தற்கொலை.

பொருளாதார - சமூக அசமத்துவம் தலைவிரித் தாடும், சந்தையில் கல்வி விற்கப்படும் ஒரு நாட்டில், படிப்புக்கோ தொழிலுக்கோ ஒரு மாணவரோ - மாணவியோ தகுதியானவரா என்பதை ஒரே சமமான சோதனையால் நிர்ணயிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையே இந்தக் கேள்வியிலிருந்துதான் தொடங்குகிறது. சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் உருவாக்கப்படும் தேர்வு முறைகளின் தரத்தையும் சமூக நோக்கத்தையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது, அதனால் பாதிக்கப் படுபவரின் தரத்தை அல்ல. இதற்கு நீட் தேர்வு விதி விலக்கல்ல. அதுவும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதுதான்.

தேர்வின் முக்கியம் எது?

உலகம் முழுவதிலும் நுழைவுத் தேர்வுகளிலும், வேலைக்குத் தெரிவுசெய்யும் தேர்வுகளிலும் பயன்படுத்தப்படும் ஐ.க்யூ. தேர்வு (IQ Test) அல்லது புத்திசாலித்தனத்தை அளக்கும் தேர்வு, இப்படிக் கேள்விக்கு உள்ளானதுதான். கேள்வி கேட்டவர் அமெரிக்க எழுத்தாளர் ஆலன் காஃப்மான். புத்திசாலித்தனத்தை அளக்கும் தேர்வு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்க வேண்டுமென்றார் அவர்.

“கவனம் குழந்தை யின் மீதுதான்… ஒரு குழந்தை தேர்வுக்கான கேள்விகளைக் குறிப்பிட்ட எந்தச் சூழலில், எப்படி அணுகுகிறது என்பதே தேர்வின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவு கள் அறிவிக்கப்பட வேண்டும். உலகளாவிய மதிப்பெண்களுக்கு அழுத்தம் தரக் கூடாது. தேர்வு என்பது சக்திமிக்க உதவும் காரணியாக இருக்க வேண்டுமேயொழிய, ஓரிடத்தில் அமர்த்திவைப்பது, முத்திரை குத்துவது போன்ற கல்வித் துறை ஒடுக்குமுறைகளின் கருவியாக இருக்கக் கூடாது.”

ஐ.க்யூ. சோதனை குறித்த இத்தகைய வலிமையான விமர்சனங்கள் எழுந்த பிறகு, அத்தகைய சோதனைகளும் மாற்றப்பட்டுவருகின்றன. அவை, இப்போது ஒருவரின் பலவிதத் திறமைகளையும் சோதிக்கும் வகையிலும், பல்வேறு சமூகப் பிரிவினரின் கிரகிக்கும் திறன்களை அடிப்படையாகக்கொண்டும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க மனவியல் அமைப்பின் முன்னாள் தலைவரான டையேன் ஹால்பெர்ன் கூறுவதைக் கேளுங்கள்: “ஒருவரைக் குறித்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற் கான வழிமுறைகள் நமக்கு எப்போதுமே தேவையாக இருக்கும். நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல; பல்வகைப்பட்ட திறன் கொண்டவர்கள். புத்தி சாலித்தனம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் வளர்வது என்று எண்ணாமல், அது மாற்றமில்லாத உள்ளார்ந்த திறன் என்று நினைப்பது தான் தவறு.”

அறிவியல் ஆய்வுகளும் இதையேதான் சொல் கின்றன. மூளை மாற்றமில்லா ஜடமில்லை. அதன் செயல்பாடு மாற்றியமைக்கத் தக்கது. நியூரான் எனப்படும் நரம்பு செல்கள், செய்திகளை சிக்னல்களாக வெளியிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து வெளியேயும் கடத்துகின்றன. செய்திகள் நியூரான் வழித்தடங்கள் மூலம் பயணம் செய்கின்றன.

நாம் புதியதாகவும் வித்தியாசமானதாகவும் ஒன்றை அனுபவிக்கும்போது, புதிய நியூரான் வழித்தடங்கள் உருவாகின்றன. ஒரு விஷயத்தைத் தொடர்ந்தும் வித்தியாசமாகவும் செய்யும்போது, புதிய நியூரான் வழித்தடங்கள் மூளையில் உருவாகின்றன என்கிறது அறிவியல்.

தூண்டும் நியூரான்கள்

ஐன்ஸ்டைன் கூறுவதைக் கேளுங்கள்: “நான் புத்திக்கூர்மை கொண்டவன் அல்ல. ஒரு சமன்பாட்டையோ கணக்கையோ தீர்க்க நான் மற்றவர்களைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன் என்பதுதான் உண்மை.”

மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் தூண்டிவிட்டு, புதிய நியூரான் வழித்தடங்களை உருவாக்கும் கல்வியை நாம் அளிக்கிறோமா என்பது தான் கேள்வி. ‘உன் மூளையில் படிப்பே ஏறாது’ என்று இந்த வழித்தடங்களையெல்லாம் அடைத்துவிடுவது தான் துயரம். படிப்பே ஏறாத மூளை என்று ஒன்று இல்லை. (பிறவியிலேயே குறைபாடு இருப்பவர்களைத் தவிர) லூயிஸ் டெர்மான் என்கிற அமெரிக்கக் கல்வி சார்ந்த மனவியல் ஆராய்ச்சியாளர் 1921-ல் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 1,470 பேருக்கு ஐ.க்யூ. சோதனைகள் நடத்தினார். அதில் தேறாத வில்லியம் ஷாக்லியையும் லூயிஸ் ஆல்வாரெஸையும் தன் ஆய்விலிருந்து வெளியேற்றிவிட்டார். வில்லியம் ஷாக்லி 1956-லும், லூயிஸ் ஆல்வாரெஸ் 1968-லும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.

ஒரு பள்ளியில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் அங்கிருக்கும் ‘ஞானக் குழந்தைகளின்’ திறனை அடையச் செய்வது சாத்தியம். இதற்கான சரியான மனோபாவத்தையும் அணுகுமுறையையும் கற்றுத்தருவதுதான் அதற்கு வழி. இதற்கு ஒரு குழந்தைக்குப் பள்ளியிலும் வீட்டிலும் சரியான சூழல் தேவை.

தொடர் பயிற்சிதான் சரி

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கல்வி மனவியல் ஆராய்ச்சியாளராக இருக்கும் பேராசிரியர் ஆண்டர்சன் எரிக்சன் இதையே தான் கூறுகிறார். இசை, விளையாட்டு, ஞாபக சக்தி என்று எந்தத் துறையின் சாதனைகளை எடுத்துக்கொண்டாலும், அதில் சிறந்து விளங்குவது ஒரு நபரின் உள்ளார்ந்த திறன் அல்ல என்கிறார் அவர். தொடர் பயிற்சிதான் சாதனையாளர்களை உருவாக்குகிறது.

ஐன்ஸ்டைன் குழந்தையாக இருக்கும்போது சரளமாகப் பேச வராது. ஜூரிக் நகரிலுள்ள பாலிடெக்னிக்கின் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தார். எனினும், இயற்பியல் மற்றும் கணிதத் தேர்வுகளில் அவர் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்ததைக் கருத்தில் கொண்டு, அந்த பாலிடெக்னிக் அவரைப் படிக்க அனுமதித்தது. பிறகு, சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு இயந்திரத் தொழில்நுட்பத்தில் அவருக்குப் போதிய திறமை இல்லாததால் பணி உயர்வு கிடைக்க வில்லை. இதே ஐன்ஸ்டைன்தான் நியூட்டனின் விதிகளை மாற்றி எழுதிய சார்பியல் கோட்பாட்டை உருவாக்கி உலகப் புகழடைந்தார்.

சமமற்ற ஆடுகளத்தில் சீரற்ற ஆட்ட விதிகளுடன் குழந்தைகளை விளையாட விட்டுச் சிலரைத் தேர்ந்தெடுத்துச் சீராட்டுகிறோம்.. பாராட்டுகிறோம். மரமேற முடியாத மீன்கள் நீச்சலையும் மறந்து தண்ணீருக்குள் அழுதுகொண்டிருக்கின்றன!

-ஆர். விஜயசங்கர்,
ஆசிரியர், ஃபிரண்ட்லைன்,

தொடர்புக்கு:

vijay62@gmail.com

நன்றி :

தி இந்து : 08 Sep 2017  .. கருத்து பேழை.

Collected
by
Ezhilarasan Venkatachalam
e3 institute,
Arisipalayam, Salem

ENGLISH TRAINING THROUGH TAMIL