TEACH VIA TAMIL TRANSLATION BY EZHILARASAN TDH 2017, 1208

Mastering English Language (Translation Version 01)

New Lesson, New Path
புதிய பாடம், புதிய பாதை
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Note :

This article was translated by google from Tamil to English 50% and Ezhilarasan 50%
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=



What is the direction in which to go in English language education?

ஆங்கில மொழிக் கல்வியில் செல்ல வேண்டிய திசை எது?
  

m
m
Anantha Krishnan Committee has found out that the English ability of Tamil Nadu teachers and students is very poor.

ஆங்கில மொழியைக் கற்பிப்பது குறித்து மு.அனந்த கிருஷ்ணன் குழு முன்வைத்துள்ள வரைவு தமிழ்நாட்டு ஆசிரியர்களின், மாணவர்களின் ஆங்கிலத் திறன் மோசமாக இருப்பதாகக் கவலைப்படுகிறது.

The reason it says is because of teaching English grammar rules alone.

இதற்கு ஆங்கில இலக்கண விதிகளைக் கற்றுக்கொடுப்பதுதான் காரணம் என்கிறது.

"A person who had mastered the grammar rules of a language need not necessarily have the ability to use the language well.

‘‘ஒரு மொழியின் இலக்கண விதிகள் தெரிவதாலேயே அம்மொழியை நன்கு பயன்படுத்தும் திறன் கிடைத்துவிடுவது இல்லை.

In order to either read or hear and understand a language, we should necessarily start using it in our daily life to write and communicate our thoughts.

 ஒரு மொழியைக் கேட்டும் வாசித்தும் தெரிந்து கொள்வதற்கு அல்லது அதனை நாமே எழுதியும் பேசியும் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும்போது நாம் அம்மொழியை உணர்கிறோம்.

Only by expressing the correct meaning while speaking the language we multiply our word base or vocabulary of  the language and finally get a command or mastery of that language.", it says further.

 இவ்வழியில் பேசும் மொழியின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமே நாம் அம்மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்கிறோம், அம்மொழியை அகவயப்படுத்துகிறோம்’’ என்று வரைவு கூறுகிறது.

The term "mastery of language"  that the Committee refers to can be understood as the ability to completely understand what another community speaks in their native language.

அந்த வரைவு குறிப்பிடும் ‘அகவயப்படுத்துதல்’ என்ற சொல்லை, ஒருவர் இன்னொரு சமூகம் பேசும் மொழியைத் தனது ஆக்கிக்கொள்ளுதல் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

The Committee says that the Tamil student does not have to learn English grammar rules to get mastery in English.

இவ்வகையில், ஆங்கிலத்தைத் தமிழ் மாணவர் தனது ஆக்கிக்கொள்வதற்கு இலக்கண விதிகளைக் கற்க வேண்டியதில்லை என்கின்றனர் வரைவுக் குழுவினர்.

On the contrary, they should listen to the language, read the language. And then try to read and write in that language.

மாறாக, அந்த மொழியைக் கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், எழுதவும் பேசவும் வேண்டும் என்கின்றனர்.

What does it mean to hear the language? There should be the language speakers all around the student.
மொழியைக் கேட்பது என்றால் என்ன? மாணவரைச் சுற்றிலும் அம்மொழி பேசுவோர் இருக்க வேண்டும்.

 In Tamilnadu, 1% of children can have a good English environment in home and school.

தமிழ்நாட்டில் 1% குழந்தைகளுக்கு வேண்டுமானால் வீட்டிலும் பள்ளியிலும் ஓரளவு நல்ல ஆங்கிலம் கேட்டு வளரும் சூழல் இருப்பதாகக் கொள்ளலாம்.

But 99% of children hear only Tamil in the home and outside school. According to this Committee, the English environment for students is neither inside nor outside the school.

ஆனால், 99% குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் தமிழ் ஒன்றை மட்டுமே கேட்கின்றனர். இந்த வரைவு கூறுவதன்படி, மாணவர்களுக்கான ஆங்கிலச் சூழல் பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் இல்லை.

But it wants to do so only in the school.

ஆனால், அது அச்சூழலைப் பள்ளியில் மட்டுமேனும் ஏற்படுத்த ஆசைப்படுகிறது.
..
This seems to be a reverse attempt in teaching a language.

மொழிக் கல்விப் பயிற்றுவிப்பதில் தலைகீழ் முயற்சிபோல இது தோன்றுகிறது.

The first school for children to learn the mother tongue is their community.

தாய்மொழியைப் பயில்வதில் குழந்தைகளின் முதல் கல்விக்கூடமே அவர்கள் வாழும் சமுதாயம்தான்.

That's how our Tamil children first learn to speak Tamil from their  parents and community, and then begin to learn 'written Tamil' with grammar. This is the natural language learning process. It is only possible in the mother tongue.

 அவ்வகையில் தான் நம் தமிழ்க் குழந்தைகளும் முதலில் பெற்றோரிடம், சமுதாயத்திடம் ‘பேச்சுத் தமிழ்’ கற்றுக்கொண்டு, பிறகு இலக்கணப்படி ‘எழுதும் தமிழ்’ கற்கத் தொடங்குகிறார்கள்.

இதுவே இயற்கை வழி மொழிக் கற்றல். இது தாய் மொழி பயில்வதில் மட்டுமே சாத்தியம்.

As for the foreign language, the situation is upside down.

அயல்மொழி பயில்வதைப் பொறுத்தவரை, நிலைமை தலைகீழானது

The children, who learn at least the first five classes in school in their mother tongue, use its grammar to write in a foreign language. Then they learn to speak the foreign language.

முதலில் பள்ளிக்கூடத்தில் முதல் ஐந்து வகுப்புகளுக்கேனும் எழுத்திலும் பேச்சிலும் இலக்கணத்திலும் தாய்மொழியில் தேர்ச்சி பெறும் குழந்தைகள், அந்த மொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் அயல் மொழியை எழுதக் கற்கிறார்கள். பிறகு, தொடர்ச்சியாகப் பேசக் கற்கிறார்கள்.

Thus, in the countries like France and Germany, the first five classes are taught in their mother tongue and they begin to learn any foreign language like English only from the sixth standard.

இப்படித்தான் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முதல் ஐந்து வகுப்பு வரை தாய்மொழியில் தேர்ச்சி பெற்றுவிட்டு, ஆறிலிருந்து ஆங்கிலம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அயல் மொழியைக் கற்கத் தொடங்குகின்றனர்.

If the foreign language is English, then we write first, and then speak in English later. Our Tamils, including Abdulkalam, mastered English only this way. Even the 'Silver Tongue' Srinivasa Shastri, who found grammatical errors in Churchill's speech also learnt English this way.

 அயல்மொழி ஆங்கிலம் எனும்போது முதலில் எழுத வரும், பிறகுதான் பேச வரும். இந்த வழியில் ஆங்கிலம் பயின்றவர்கள்தான் அப்துல்கலாம் உள்ளிட்ட நம் தமிழர்கள். சர்ச்சில் எழுத்திலேயே இலக்கணப் பிழை கண்ட ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரியும் இப்படி ஆங்கிலம் கற்றவர்தான்.

This is nothing new to the Tamil Nadu education department. In the 1960s, Tamilnadu students studied only in Tamil up to Class 5 and subsequently learned to write in English with the knowledge of Tamil grammar. Later  learnt to also speak in English. So if Tamil is our mother tongue, we first speak, then we learn to write it.

இது தமிழ்நாட்டுக் கல்வித் துறைக்கு ஒன்றும் புதிதன்று. 1960-களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்பு 5 வரை தமிழில் தேர்ச்சிபெற்று, பின்னர், தமிழ் இலக்கணத்தின் துணையுடன் ஆங்கிலத்தை முதலில் எழுதவும், பிறகு பேசவும் கற்றனர்.

ஆகவே, தாய்மொழி தமிழ் எனும்போது முதலில் பேச வரும், பிறகுதான் எழுத வரும்.

According to the Asar 2016 report, only 12% of the 8th grade students of government and private schools  can identify the English alphabets or letters.
The Committee states that the authors' ability to English is inadequate. Therefore, the Committee comittee should take into consideration this fact.

அசர் 2016 அறிக்கையின்படி, அரசு, தனியார் பள்ளிகளின் 8-ம் வகுப்பு மாணவர்களில் 12% பேரே ஆங்கிலச் சிற்றெழுத்துக்களை அடையாளம் கண்டு படிக்கின்றனர்.

இதற்கு ஆசிரியர்களின் ஆங்கிலத் திறன் போதாமையே காரணம் என வரைவு கூறுகிறது. ஆகவே, இந்த நிலையையெல்லாம் வரைவு பாடத்திட்டக் குழுவினர் கருத்தில்கொள்ள வேண்டும்!

The writer of this article is the author of the Tamil book titled, "NALANKILLI S ENGLISH TUTOR"  (English language training book)

நலங்கிள்ளி, ‘நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்’ என்னும் ஆங்கில மொழிப் பயிற்சி நூல் எழுதியவர்.

~நலங்கிள்ளி
Translated into English by
google and Ezhilarasan

தொடர்புக்கு: enalankilli@gmail.com
Contact: enalankilli@gmail.com

நன்றி:

தி இந்து :  08 Dec 2017
சிந்தனைக் களம் சிறப்புக்  கட்டுரை

Ezhilarasan Venkatachalam

THANKS TO  

EZHILARASAN VENKATACHALAM
 SALEM
English Trainer

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215