Posts

Showing posts from September, 2017

Good words changed LIFE FREE ENGLISH THROUGH TAMIL GOOD WORDS

வாழ்க்கையை மாற்றும் வார்த்தை A few words that changed a beggar's life. . [INSTRUCTIONS ]  . நெடும்காலத்துக்கு முன்பாக, காசியில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். Many years ago a beggar live in KAASI.  கையேந்தி காசு கேட்பதே அவனது வாழ்க்கை. ஒரு நாள் காசிக்கு ஞானி ஒருவர் வந்திருந்தார். Begging for alms was his life. Once a wise man came there. அவரிடம் ‘‘என் வாழ்க்கையை மாற்ற ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’’ எனக் கேட்டான். He asked him, "Please give me some advice to change my life". அதற்கு அந்த ஞானி, ‘‘நாளை முதல் நீ எவரை சந்தித்தாலும் காசு கொடுங்கள் எனக் கேட்பதற்குப் பதிலாக, நன்றாக இருங்கள் என வாழ்த்த வேண்டும். He said to the beggar, "From tomorrow instead of asking for money from people, you tell to each person that you see, ' I WISH YOU SUCCESS'  . இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டால் உன் வாழ்க்கை மாறிவிடும்’’ என்றார். If you do this your life will change. "  பிச்சைக்காரனுக்கு நம்பிக்கையில்லை. But the beggar was doubtful.  ஆனாலும், ஞா...

Bill Gates part 2 FREE ENGLISH THROUGH TAMIL BILL GATES PART 2

Image
Bill Gates Part 2 (bi-lingual) ..  சாஃப்ட்வேர் என்னும் மூளை உழைப்புக்கு உரித்தான மரியாதையை வாங்கித் தந்தவர்கள் மைக்ரோசாஃப்ட்தான். It was Microsoft who restored the due respect to software development. அதுவரை, சாஃப்ட்வேர் எழுதியவர்கள் அதை வணிகக் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை. Till then persons who developed software did not view it with a business perspective. அதை விற்றுப் பணம் சம்பாதிப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. They never thought of earning money by selling software. வாடிக்கையாளர்கள் ஓசியில் பயன்படுத்தினார்கள். The customers used it free of cost . பில் இதை மாற்றினார். Bill changed this.   *** கடுமையாக உழைத்தும், மைக்ரோசாஃப்ட் கல்லாவில் பணம் கொட்டவில்லை. In spite of working hard, Microsoft did not earn much. பில் காரணத்தை ஆராய்ந்தார். Bill analysed the reason for this. ஏராளமானோர் திருட்டுத்தனமாக காப்பி செய்து பயன்படுத்திக்  கொண்டிருந்தார்கள். Many were copying it illegally and using it . தன் மூளை உழைப்பைத் திருடுகிறார்கள் என்று பில்...

Thanthi Responsible Son FREE ENGLISH TRAINING THROUGH TAMIL THANTHI 2016

Image
A Responsible Son  - Translation Thanthi 2016 . [INSTRUCTIONS ]  வலி அங்கே .. மகிழ்ச்சி இங்கே .. "Pain there, happiness here" .. நான் கடைத் தெருவிற்கு சென்றிருந்த போது ஓரு இளைஞர் மூன்று சக்கர சைக்கிளில் அட்டைப் பெட்டி  பார்சல்களை  வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். When I had been to the market, I happen to see a person pushing a tricycle with some cardboard boxes in it. அதை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காரணம் அவர் டிப்ளமோ படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் சூப்ரவைசராக பணி புரியும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்.  I was shocked to see that, because he was a diploma qualified person of our area, who was working as a supervisor in a private company. வியர்க விறுவிறுக்க வந்த அவர் அருகில் சென்று, "உங்கள் வேலை என்னாச்சு? படித்த நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  வந்துவிட்டீர்கள்?"  என்று கேட்டேன். I went near that person who was sweating terribly and asked, "What happen to your job? Being an educated person, why did you join this type of job "....

Finland's school FREE SPOKEN ENGLISH THROUGH TAMIL FINLAND'S SCHOOLS

Image
  Finland stands first in offering the world's best education  உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. Finland stands first in offering the world's best education . அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? Let us see what is special in Finland's education system. 👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. In Finland, they send a child to school only at the age of 7.  *** 👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்ககள் தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. For the next three years, they attend school only for half of the year and the rest of the days are holidays. 👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். The school working hours is also less. அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. And even...

Bill Gates Part1 Translation FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BILL GATES

Image
Bill Gates   (Bi-lingual)  .. Pioneers in Business ..  தொழில் முன்னோடிகள்: பில் கேட்ஸ் (1955) . MENU 1002  m ONLINE English-CLASS m MOVIES MENU 2018  m மூதுரை -moothurai m Ulaga neethi - உலக நீதி .  "நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது."  - பில் கேட்ஸ் " Good decisions come from experiences. And experiences come from making WRONG DECISIONS." ~Bill Gates. உலகம் இதுவரை, பல்லாயிரம் பிசினஸ் மேதைகளைச் சந்தித்திருக்கிறது. பில் கேட்ஸைவிடத் திறமையான கண்டுபிடிப்பாளர்கள், நிர்வாக மேதைகள், கஸ்டமர்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாய்க் கணிப்பவர்கள் ஏராளம், ஏராளம். The world had seen thousands of business geniuses better than Bill Gates in intelligence, administrative skills and the talent to read the customer's pulse. ஆனால், பணம் கொட்டும் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைத் துரத்தித் துரத்திக் காசாக்குவதிலும் பில் கேட்ஸை மிஞ்ச ஆளே கிடையாது. But there is none to beat Bill Gates in ...

Bitll Gates Part 1 FREE ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN BILLGATES

Image
பில் கேட்ஸ் (1955) Part 1 "நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது." - பில் கேட்ஸ் உலகம் இதுவரை, பல்லாயிரம் பிசினஸ் மேதைகளைச் சந்தித்திருக்கிறது. பில் கேட்ஸைவிடத் திறமையான கண்டுபிடிப்பாளர்கள், நிர்வாக மேதைகள், கஸ்டமர்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாய்க் கணிப்பவர்கள் ஏராளம், ஏராளம். ஆனால், பணம் கொட்டும் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைத் துரத்தித் துரத்திக் காசாக்குவதிலும் பில் கேட்ஸை மிஞ்ச ஆளே கிடையாது. இதனால்தான், கடந்த 23 வருடங்களாகத் தயாரிக்கப்பட்டு வரும் உலகக் கோடீஸ்வரர்களில் பட்டியலில் 19 வருடங்களாக முதல் இடம் பிடித்து வருகிறார். **** 1955. அக்டோபர் 28. அமெரிக்க சியாட்டில் நகரத்தில் வசித்த வில்லியம், மேரி தம்பதிகளின் மகன் வில்லியம் ஹென்றி கேட்ஸ் 3. ஆமாம், இதுதான் பில் கேட்ஸின் முழுப் பெயர். அப்பா பிரபல வக்கீல். அம்மா பள்ளி ஆசிரியை. பள்ளியில் சேர்த்தார்கள். பையனுக்குப் படிப்பில் விருப்பமே இல்லை. மகன் உதவாக்கரையோ என்று பெற்றோருக்குக் கவலை. பில் வயது ஏழு. சியாட்டிலில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பொடியனுக்கு...

katralai medu Govt school FREE ENGLISH TRAINING THROUGH TAMIL SCHOOL

ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் வழங்கும் அதிசயம்: தனித்தன்மையோடு மிளிரும் கற்றாழைமேடு அரசு பள்ளி மாணவர்கள் பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் கற்றாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ளது கற்றாழைமேடு எனும் குக்கிராமம். இந்த மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதி. போக்குவரத்துக்கு ஏற்ற சாலையோ, பேருந்து வசதியோ கிடையாது. அத்தியாவசியத் தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கான கடைகூட இந்த ஊரில் கிடையாது. வீடுகள், வயல்கள், ஒரு கோயில் தவிர அந்த கிராமத்தில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மட்டுமே. விவசாயக் கூலி வேலைக்காக வெளியே செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கான ஓர் இடமாக மட்டுமே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கருதி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் 2008-ம் ஆண்டு கற்றாழைமேடு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சலீம் பாபு பொறுப்பேற்றார். அதன்பிறகு இந்த அரசு தொடக்கப் பள்ளி ஒரு முன்மாதிரி அரசுப் பள்ளியாக முன்னேறத் தொடங்கியது....

Fish can not climb tree / Psychology in Tamil EZHILARASAN CHILDCARE 0809

Image
மரமேறாத மீன்கள்! ஆர்.விஜயசங்கர் ‘எல்லோருமே ஜீனியஸ்தான். ஒரு மீனின் திறமையை அது மரமேற முடியுமா என்கிற அடிப்படையில் நிர்ணயம் செய்தால், வாழ்நாள் முழுவதும் தான் மரமேறத் தெரியாத முட்டாள் என்ற எண்ணத் துடனேயே வாழும். ’அறிவியல் மாமேதை ஐன்ஸ்டைன் இந்த வரிகளை எழுதவில்லை என்கிற வாதம் இன்றும் இருக்கிறது. அது நடக்கட்டும். ஆனால், இந்த வலிமை மிகு வரிகளின் உண்மை இன்று நம்மைத் தாக்குவதற்குக் காரணம், அனிதாவின் தற்கொலை. பொருளாதார - சமூக அசமத்துவம் தலைவிரித் தாடும், சந்தையில் கல்வி விற்கப்படும் ஒரு நாட்டில், படிப்புக்கோ தொழிலுக்கோ ஒரு மாணவரோ - மாணவியோ தகுதியானவரா என்பதை ஒரே சமமான சோதனையால் நிர்ணயிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையே இந்தக் கேள்வியிலிருந்துதான் தொடங்குகிறது. சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் உருவாக்கப்படும் தேர்வு முறைகளின் தரத்தையும் சமூக நோக்கத்தையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது, அதனால் பாதிக்கப் படுபவரின் தரத்தை அல்ல. இதற்கு நீட் தேர்வு விதி விலக்கல்ல. அதுவும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதுதான். தேர்வின் முக்கியம் எது? உலகம...