NICK VUJICIC SPOKEN ENGLISH THROUGH TAMIL -EZHILARASAN -ABOUT

_
"தமிழ் இளைஞர்கள் இதை அவசியம் படிக்கவும்" * எழிலரசன் *
 -----------------------------------------------------------------------
நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச்
(Nicholas_James_Vujicic) அல்லது சுருக்கமாக 
நிக்_வோய்ச்சிச்

GOTO MAIN PAGE 

பிறப்பு: 4_டிசம்பர் 1982), உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர்.  செருபிய இனத்தைச் சார்ந்த இவர் [3]  ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் என்னுமிடத்தில் பிறந்தார்.[4] இவர் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார்.

ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.
இவர்_தன்னுடைய_எட்டாவது_அகவையில் மன_உளைச்சல் காரணமாக, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார்.[5] அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி காட்டினார்[6], இது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது.

தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.

தன்னுடைய ஏழாம் வகுப்பில், பள்ளியின் மாணவத் தலைவராகவும், தங்கள் பள்ளிக்கான நன்கொடை வசூலிப்பதற்காகவும் அருகிலுள்ள தொண்டு நிறுவங்களை அணுகுதல் உள்ளிட்டவைகளை செய்பவராகவும் விளங்கினார்.[7] பிறகு தன்னுடைய இலாப நோக்கற்ற லைப் வித் அவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) நிறுவனத்தை தொடங்கினார்.

2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய_நிறுவனத்திற்கும்_உதவ_முன்வந்தன._தற்போது, ஐக்கிய_அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்
2012-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் நாள், கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நிக்கோலஸ் சேம்சு வோய்சிக், சுவிசர்லாந்தில், 30 ஜனவரி, 2011 அன்று
வோய்ச்சிச் தன்னுடைய 21-ம் அகவையில் கிரிபித் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தார். கூடவே, மிகப்பிரபல்யமான பேச்சாளராகவும் உருவானார்.

சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவருடன் உரையாற்றியுள்ளார்.[10] இவர் பள்ளிகள், நிறுவனங்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார்.
வோய்சிச் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமானலைப் வித் அவுட் லிமிப்ஸ் (Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life)[11] 2010-ம் ஆண்டு வெளியானது.

மார்ச் 2008, பாப் கம்மிங்கிசுடன், 20/20 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணலில் பங்குபெற்றார். இவர் தி பட்டர்பிளை சர்க்கஸ் என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார், அது 2009-ம் ஆண்டு டோர்போஸ்ட் திரைப்பட திட்டத்திலும், மெத்தேட் பெஸ்ட் திரைப்பட விழாவிலும், தி பீல் குட் பிலிம் விழாவிலும் (2010) சிறந்த திரைப்படத்திற்கான பரிசு பெற்றது.[13] சம்திங்க் மோர், என்னும் காணொளியை யூடியூபில்வெளியிட்டார்.[14]
நன்றி :  Wikipedia

-எழிலரசன் *

EZHILARASAN VENKATACHALAM

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215