moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

மூதுரை - ஔவை -
Moothurai Translation 1 ~ 5
(version 2)
..
.
வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

பொருள்:

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

For those who worship with flowers, the rosy coloured Lord Vinayagar, the following good things they will get in their life .. expertise is talking, a good heart, disease free body and the blessings of the wealth Goddess, Lakshmi.

1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல்?' எனவேண்டா- நின்று
தளரா வளர்தெங்கு தாணுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

பொருள்:

ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும்,  நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது.

When we are helping others, we should not think of when that person will reciprocate it or do it back to us.

எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது  வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும்.

Whatever may be the quality of the water that a palm tree may imbibe with its root, it will always give back only sweet tender juice.

அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

Likewise, whatever meagre help that you may have done to others, it will definitely come back to you one day in a magnified way.

2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்

பொருள்:

நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது.  அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும்.

The help that you do to good people is like the inscriptions engraved on a stone. It will always be permanent and others will come to know about it even years after.

அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது.  அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி  நிலைக்காது போகும்.

But the help you do to mean people is like the writing done on water. It will disappear within a few seconds.

3. இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கையர்க்கு அழகு

பொருள்:

இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே.  அனுபவிக்க முடியாது.

Having no money when a person is young or getting excess money when a person is aged ... both are bad. It can't be enjoyed.

அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது.  அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

It is like a flower that blossoms at the wrong season. Similarly, the youth and beauty of a woman goes waste, if she does not have a man for her.


4. அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

பொருள்:

நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்  நண்பர்களாக மாட்டார்கள்.

Mean people will never become a friend to you even if you mingle with them freely.

தம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர்.

On the contrary, wise men will always maintain their dignity, even when they are facing big problems.

அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.   தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்  போன்றது அவர் நட்பு.

Their friendship is like the milk that never looses its taste due to over heating. The more you try to char a conch in fire, the whiter it will become. Wise men's friendship is like that.


5. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

பொருள்:
கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும்.  அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன்  தரும்.

Tall trees with hundreds of branches yield fruits only at a particular season. Likewise, even if you put greats efforts, we may reap the benefits of those actions only at a particular time.

Thanks to Mr.Seetharaman.

Source :

http://jagadhguru-needhinoolgal.blogspot.in/2012/12/30.html

Narration Translated into English

by

Ezhilarasan Venkatachalam
Salem.
ENGLISH MADE EASY
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சியாளர்
.
.

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215