DONKEYS PUT IN JAIL ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

Translation -DONKEYS PUT IN JAIL FOR EATING PLANTS

.
Eight donkeys were put in jail for 4 days  because they ate plants worth Rs.60,000. /  ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தாவரங்களை தின்றதால் 8 கழுதைகளுக்கு நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டன.
This peculiar incident happened in U.P. // உத்தர பிரதேசத்தில் இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது..

In Oorai, Jaloon District, U.P. in the District Jail, plants and saplings were placed in the campus for beauty. /  உத்தர பிரதேசத்தில் ஜாலோன் மாவட்டத்தில் உள்ள ஓரை என்ற இடத்தில் மாவட்ட சிறை வளாகத்தில் அழகுக்காக தாவரங்கள், மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன.

Last 24th, eight donkeys entered the jail campus and ate the plants. /  கடந்த 24-ம் தேதி சிறை வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங்களைத் தின்று சேதப்படுத்தின.

As per instructions from the Senior Officers, the police men caught the donkeys and put them in jail. / மூத்த சிறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இந்தக் கழுதைகளை போலீஸார் சுற்றி வளைத்து சிறையில் அடைத்தனர்.

These donkeys were owned by Kamakesh. / இந்தக் கழுதைகள் கமலேஷ் என்பவருக்கு சொந்தமானது.

As he came to know that his donkeys had been retained in the jail, he met the  senior jail authorities.

தனது கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த கமலேஷ், சிறையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்தார்.

He requested them to release his donkeys. But the jail authorities refused and chased him away.

கழுதைகளை விடுவிக்குமாறு கோரினார். இதற்கு மறுத்த சிறை அதிகாரிகள் அவரை பின்னர் வருமாறு விரட்டினர்.

Following this, he met the local BJP leader and made a representation.

இதைத் தொடர்ந்து உள்ளூர் பாஜக தலைவரை சந்தித்து கமலேஷ் முறையிட்டார்.

The BJP Leader came to the District Jail and talked with the jail authorities.

மாவட்ட சிறைக்கு கமலேஷுடன் வந்த பாஜக தலைவர், சிறை அதிகாரிகளுடன் பேசினார்.

Then the owner gave the following written declaration, to the police, "Hereafter, I promise not to allow my donkeys to loiter on residential areas and public places."

 ‘இனி கழுதைகளை வசிப்பிடங்களிலும், பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் சுற்றித் திரிய விடமாட்டேன்’ என்று கமலேஷ் போலீஸாரிடம் எழுதிக் கொடுத்தார்.

Following this, the donkeys that were retained in the jail for 4 days, were released.

இதையடுத்து, நான்கு நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கழுதைகள் விடுதலை செய்யப்பட்டன.

Warnings were of no use
எச்சரித்தும் பயனில்லை

The Head Constable of the Jail said, " The donkeys had eaten and damaged plants worth Rs.60,000. In spite of repeated warnings, the owner of the donkeys never bothered to control them.

சிறையின் தலைமை கான்ஸ்டபிள் ஆர்.கே.மிஸ்ரா கூறுகையில், ‘‘60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாவரங்களைக் கழுதைகள் தின்றும் கடித்தும் சேதப்படுத்தின. பலமுறை எச்சரித்தும் கழுதைகளின் உரிமையாளர் அவற்றை கட்டுப்படுத்தவில்லை.

Therefore, as per instructions from the Senior Officers, we put the donkeys in the jail.

எனவே, அதிகாரிகளின் உத்தரவின்பேரில் கழுதைகளைச் சிறையில் அடைத்தோம்.

He also said, "Many times, the donkeys had been the cause for road accidents".

பல சமயங்களில் சாலை விபத்துக்களுக்கும் இந்தக் கழுதைகள் காரணமாக இருந்துள்ளன’’ என்றார்.

கான்பூர் / KANPUR

நன்றி: தி இந்து   29 Nov 2017
More at .. 

.

Translated by

Ezhilarasan Venkatachalam
Salem.
Online English Trainer
ENGLISH MADE EASY
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி  



Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215