NOTICE DEC 2015 drawing like ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN


வணக்கத்திற்குரிய நண்பர்களே,
ஸ்போகன் இங்கிலிஸ் ஒரு கலை --டிராயங், பெயிண்டங், மியூசிக் போல, சமைப்பது, “டூவீலர்” ஓட்டுடவது போல. இதை கொஞ்சம், கொஞ்சமாகத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஸ்போகன் இங்கிலிஸ் சுவருக்கு ”பெயிண்டிங்” அடிப்பது மாதிரி. முதலில் சுவரைக்கட்டி அதை பூச வேண்டும். சுவர் கட்டும் முன்பு கடக்கால் தோண்டி, அஸ்திவாரம் போட வேண்டும். அதாவது, பெயிண்டிங் அடிப்பது நாலாவது கட்டம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய.
இங்கு நாங்கள் உங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறோம் என்பதற்கு பதில், ஆங்கிலத்தின் மேல் உங்களுக்கு காதல் வரும்படி செய்கிறோம் என்று கூறுவதே சரி. ஆம் தினமும் எங்களிடம் நீங்கள் ஒரு மணி நேரம் தான் பயிற்சி எடுத்துக் கொள்வீர்கள். ஆனால், வீட்டிலும், ஆபீசிலும், பஸ்_ஸ்டாப்பிலும் இருக்கும் ஓய்வு நேரத்தில் கூட எப்படி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள முடியும் என்ற டெக்னிக்கையும் நாங்கள் கற்றுத் தருகிறோம்.
என்னை நான் ஒரு இங்கிலிஸ் டாக்டர் என்றே கூறிக் கொள்ள, ஆசைப்படுகிறேன். ஆகையால், என்னிடம் வருபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறேன். ஏற்கனவே ஓரளவு ஆங்கில அறிவு இருப்பவர்கள் (OUT PATIENT), சற்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறவர்கள் (IN PATIENT) மிக, மிக அதிக கவனம் தேவைப்படுகிறவர்கள் (I.C.U PATIENT)
தற்போது உங்களுக்கு இருக்கும் ஆங்கில அறிவு (இங்கிலஸ் காய்ச்சல்) எவ்வளவு என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்துக் கொள்ள ஒரு TEST-ஐ அவசியம் செய்வேன். இதில் நீங்கள் எடுத்த மார்க்குக்கு தக்கபடி உங்களுக்கு சுமார் 40 அல்லது 50 மணி நேர தீவிர ஆங்கிலப்_பயிற்சி (2 மாதம்) கொடுப்பேன். TEST-ல் நீங்கள் 30 மார்க் கூட எடுக்காவிட்டால் கூடுதல் பயிற்சி நேரம் தேவைபப்படலாம்.  (TEST--ல் TABLE, CHAIR, BENCH என்பது போன்ற வார்த்தைகளுக்கு விடை: மேஜை, நாற்காலி, நீண்ட நாற்காலி என்று எழுத வேண்டும்).
நன்றி, வணக்கம்.  
இப்படிக்கு உங்கள் நண்பர்,

எழிலரசன் வெங்கடாசலம்
EZHILARASAN VENKATACHALAM
e3 institute, salem… 9952660402

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215