Moothurai Translation song 1 to song 10 .. மூதுரை - ஔவை - . வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும். For those who worship with flowers, the rosy coloured Lord Vinayagar, the following good things they will get in their life .. expertise is talking, a good heart, disease free body and the blessings of the wealth Goddess, Lakshmi. 1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி 'என்று தருங்கொல்?' எனவேண்டா- நின்று தளரா வளர்தெங்கு தாணுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். பொருள்: ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. // When we are helping others, we should not think of when that person will recipr...
Comments
Post a Comment