MOVIE REVIEW KAKA MUTTAI –part 2a ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN -

. . 

சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள்.
‘Small crow’ is the younger boy who lives in one of the Chennai slums. ‘Big_crow’ is his elder brother. Their father is in jail for some offense. Their mother is struggling to bring him out of jail. Grandma is supporting them. Both the boys gather waste coal that keeps falling on the railway tracks and makes a living out of it.  
இவர்களது குப்பத்துக்கு அருகே புதிதாக பீட்சா ஹட் ஒன்று உதயமாகிறது. டிவி விளம்பரம் வாயிலாக பீட்சா சாப்பிட ஆசைப் படுகிறார்கள். 300 ரூபாய் பெறுமான பீட்சாவை அவர்கள் வாங்கவோ, சாப்பிடவோ முடிந்ததா என்பதை சுவாரஸ்யமான திரைப்படமாகத் தந்திருக்கிறார் புது இயக்குநர் மணிகண்டன்.
A new ‘pizza hut’ comes near their slum. The boys are attracted by the TV ads, and want to eat a pizza. Whether they were able to buy and eat the pizza costing Rs.300, is the rest of the story by debut director Manigandan.
மிகவும் சாதாரண சம்பவங்களால் ஆன படம்தான் என்றாலும் அந்தச் சம்பவங்கள் மூலம் சொல்லவரும் விஷயம் மிகவும் ஆழமானது. அதற்குக் காரணம் சம்பவங்களில் உள்ள யதார்த்தமும் அவை காட்சிப்படுத் தப்பட்ட விதமும்தான். படம் ஒரு வித உற்சாகத்துடன் நகர்ந்துகொண்டே யிருக்கிறது. சில இடங்களில் மெல்லிய சோகம் இழையோடுகிறது. ஆனால், அது இயல்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் உணர்வுகளைச் சுரண்டும் போக்கு இல்லவே இல்லை.
Though the movie had been created with very simple incidents, what is conveyed by them is very deep and sound. This is because of the frankness in communication and the powerful way in which the movie scenes had been shot. The movie keeps on going with sustained enthusiasm. Sometimes there is a light stain of sadness, but it is natural and true. At no place the director had exploited our emotions.
ஏழைகளையும் அவர்களது குடியிருப்புகளையும் மையமாகக் கொண்ட கதையில் ஏழ்மையை விற்பனைப் பண்டமாக மாற்றும் தன்மை துளியும் இல்லை. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வெளியிலிருந்து பார்க்கும் கோணத்தில் அல்லாமல் உள்ளிருந்து காட்டும் கோணத்தில் மணிகண்டன் சித்தரித் திருக்கிறார். அவர்களது சோகங்கள் மட்டுமின்றி, சந்தோஷங்கள், அவர் களுக்கேயான சிக்கல்கள், அவற்றி லிருந்து வெளியேற அவர்கள் மேற் கொள்ளும் முயற்சிகள் ஆகியவை யும் பதிவாகியிருக்கின்றன. பரிதாபத் துக்குரியவர்களாக அவர்களைச் சித்தரித்து, தள்ளி நின்று உச்சுக் கொட்டும் தொனி படத்தில் எங்கும் இல்லை. பார்வையாளர்களிடத்திலும் அத்தகைய அணுகுமுறை ஏற்படத் திரைக்கதை எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
Though the entire movie is based on slum and their dwelling, at no place that point had been misused to make money. Instead of viewing the life of very poor people from outside, he explains it from their point of view. Not only their sadness, but also their happiness, their problems and steps they take to come out of them etc are all told very nicely. At no place the movie pities them and depicts them in that line. Even it does not allow the viewers to pity them in any scene.
ஒரே நகரத்தில் இரு வேறு பொருளாதாரச் சூழ்நிலையில் வாழும் மனிதர்களிடையே தென்படும் ஏற்றத் தாழ்வுகளையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் மணிகண்டன். இது அவருக்கு முதல் படம் என்பது ஆச்சரியமளிக்கிறது.
They story explains at the same time the ups and downs in two life styles with very different economic backgrounds. And the changes that happen in the society due to them, is shown very casually. It makes us wonder whether this is the first movie for the director.
காக்கா முட்டையை எடுத்துக் குடிக்கும் காட்சியில் பெரியவன் மூன்று காக்கா முட்டைகளில் ஒன்றைத் தனக்கும், மற்றொன்றைத் தம்பிக்கும் தந்துவிட்டு இன்னொன்றைக் காக்காவுக்காக வைக்கும் காட்சி நெகிழவைக்கிறது. தோசை மாவில் பீட்சா செய்ய முயலும் பாட்டி, பையன்களைப் பார்க்க முடியாமல் தவிக்கும் அப்பா என்று பல காட்சிகள் மனதைத் தொடுகின்றன. பீட்சா கடை நிர்வாகத்தின் அணுகுமுறை, பொதுப் பிரச்சினையை அணுகுவதில் ஊடகங்களின் போக்கு, அரசியல்வாதிகள், அவர்களது அல்லக் கைகளின் நடவடிக்கைகள் ஆகியவை யதார்த்தமாகவும் வலுவாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
In a scene, the elder boy takes out three eggs of a crow from a nest, then drinks one, then gives one to his younger brother and leaves back one for the crow. This scene is touching. The grandma struggling to make pizza from dosa dough, the father’s suffering,  because of his inability to see his sons – scenes like this touch our heart. The management policies of the ‘pizza hut’ shop, the way the media is handling general problems, the politicians and their troupe – all these points had been shown frankly and in a powerful way.
[WORDS IN BLUE COLOUR=VOCABULARY=HARD WORDS]

TRANSLATION BY EZHILARASAN  - ‘ KAKA MUTTAI’ – TAMIL MOVIE REVIEW
--Translation by Ezhilarasan Venkatachalam.

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215