Posts

Showing posts from June, 2017

Dog travels alone SPOKEN English THROUGH tamil EZHILARASAN

Image
. An intelligent dog that travels alone in bus சியாட்டிலில் வசிக்கும் எக்லிப்ஸ் என்ற கறுப்பு லாப்ரடார் நாய், தினமும் பேருந்தில் தனியாகப் பயணம் செய்து வருகிறது. ECLIPSE, a labrador breed dog, is travelling daily alone in a bus in Seattle.  எக்லிப்ஸின் உரிமையாளர் ஜெஃப் யங் வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பூங்காவுக்கு பேருந்தில் அழைத்துச் செல்வார். The owner of Eclipse, Jeff Yan, will take it to a park that is a little far in a bus. 4 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் இருவரும் காத்திருந்தனர். பேருந்து வர தாமதமானதால் யங் ஒரு சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தார். Four years ago, he was waiting for the bus. But since it got delayed, he started to smoke a cigarette. அப்போது பேருந்து வந்துவிட்டது. அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று நினைத்தார். But the bus arrived. But he decided to catch the next bus. ஆனால் பொறுமையிழந்த எக்லிப்ஸ் பேருந்தில் ஏறிவிட்டது. யங் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், அது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பேருந்து கிளம்பிவிட்டது. But the impati...

Street Vendor Spoken English through Tamil EZHILARASAN

Image
  Smartest Street Vendor / தெரு வியாபாரி உலகிலேயே மிக நேர்த்தியான தெரு வியாபாரியாக இருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த 43 வயது அயில்டன் மேனுவல் சில்வா. /  Ayedon Manuvel Silva, Brazil, 43 years is the smartest street vendor in the world. வெள்ளைச் சட்டை, கறுப்பு பேண்ட், தொப்பி, குளிர்க் கண்ணாடி, ஷூ சகிதம் நொறுக்குத் தீனிகளையும் குளிர்பானங்களையும் விற்பனை செய்து வருகிறார். /  Wearing a white shirt, black pant, hat, cooling glass, shoe etc he is selling snacks and cool drinks. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிக்கு வந்து, குளிர் பானங்களைத் தயார் செய்கிறார். 7 மணிக்கு விற்பனையை ஆரம்பிக்கிறார். /  Every day he comes to a busy place at 5.30 am  and prepares cool drinks. At 7.00 am he starts his sales. மாலை 5.30 மணி வரை வியாபாரம் செய்து, சுமார் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். /  He works till 5.30 pm and earns around Rs.8,000. “நான் ஒரு பட்டறையில் வேலை செய்து வந்தேன். அந்த வருமானத்தை வைத்து மனைவி, 3 குழந்தைகளைப் பாதுகாக்க முட...

EARTHQUAKE RESIST HOUSES SPOKEN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

Image
நிலநடுக்க த்தை தாங்கக்கூடிய அதிசய வீடுகள்! Wonderful houses that can withstand an earthquake.  ஜப்பானில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் ஸ்டைரோஃபோம் ( Styrofoam ) வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. In Japan they are building Styrofoam houses that can withstand earthquakes. ஸ்டைரோஃபோம் என்றவுடன் நாம் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் தட்டு, தம்ளர், பார்சல் கட்டும் தெர்மகோல்தான் நினைவுக்கு வரும். Styrofoam may remind you about use and throw tumblers and plates and the thermocol used in packing. வீடு கட்டக்கூடிய ஸ்டைரோஃபோம் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது. இதில் கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியவை. Styrofoam used for building houses is something similar, but it is a very advanced material. விலை குறைந்தவை. வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவை. மிக வேகமாகவும் எளிதாகவும் வீட்டைக் கட்டி முடித்துவிட முடியும். They are very cheap and heat resistant. We can build these houses very fast and easily . கடந்த பத்து ஆண்டுகளாகவே ஸ்டைரோஃபோம் வீடுகள் கட்டப்பட்டு வந்...

Author eats book spoken english through tamil ezhilarasan translation

Image
British Author eats book பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் புத்தகத்தை தின்ற ஆசிரியர்: தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு  /  British author eats book because he lost in a challenge ! Sensation in live television telecast. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது புத்தகத்தை தின்ற எழுத்தாளர் மேத்யூ குட்வின். /   Mathew Goodwin a British author eats his book in a live television show. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் சவால் விட்டு தோல்வி அடைந்ததால், தான் எழுதிய புத்தகத்தையே அதன் ஆசிரியர் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. /  British author eats his book because he lost in a challenge. This incident created lot of sensation. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தெரசா மே போட்டியிட்டார். /  Recently the British parliamentary elections were held. Therasa May contested in this for the post of Prime Minister on behalf of the ruling CONSERVATIVE PARTY. முக்கிய எதிர்க்கட்சியான...

Male Lion Cares for Cub spoken English through Tamil Ezhilarasan Translation

Image
.. The responsible male lion. உலக மசாலா: பொறுப்பான ஆண் சிங்கம் VALLAS, the male lion that lives in England's zoo in Blackpool has changed our opinion about male lions. இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் உயிரினப் பூங்காவில் வசித்து வரும் வாலஸ், ஆண் சிங்கத்தைப் பற்றிய கருத்துகளை மாற்றியமைத்திருக்கிறது! In 2015, Ranjel and Vallas were a pair that mated and had a cub, Kaari. After 9 months Ranjel, the mother,  died. ரேச்சலும் வாலஸும் குடும்பம் நடத்தி 2015-ம் ஆண்டு காரி என்ற ஆண் குட்டியைப் பெற்றெடுத்தன. 9 மாதங்களில் ரேச்சல் இறந்து போனது. Generally male lions only participate in reproductive activities. And it is only the female that cares for the young ones. பொதுவாக ஆண் சிங்கங்கள் இனப் பெருக்கம் செய்வதோடு கடமையை முடித்துக்கொள்கின்றன. They rear them and also teach them to hunt. பெண் சிங்கம்தான் குட்டிகளை வளர்த்து, வேட்டையாடக் கற்றுக் கொடுத்து, பராமரிக்கும். In the absence of the caring female, the male will just drive away hyenas that tries to attach the young ones. பெண்...

COFFEE FROM MOBILE COVER ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

Image
TRANSLATION COFFEE FROM MOBILE COVER COFFEE FROM MOBILE COVERS !  .. There is a mobile company called MOKASE in Italy. This company makes mobile covers or pouches. We can prepare hot coffee from these covers. இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற ஸ்மார்ட்போன் உறைகளைத் தயாரித்திருக்கிறது .   இதை ஸ்மார்ட்போனில் மாட்டிக்கொண்டால் , தேவையானபோது சூடான காபியைப் பருகிக்கொள்ளலாம் . மக்கள் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கிறார்கள் . சிறிதளவு காபிக்கு எவ்வளவு பெரிய பதற்றத்தையும் குறைத்துவிடும் சக்தி இருக்கிறது . ஆனால் காபி கடையைத் தேடிச் செல்லவோ , காபி இயந்திரத்தை நாடவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை . அதனால்தான் ஸ்மார்ட்போன் உறையிலேயே காபியை உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள் . If we put some coffee    capsules in that cover and press a button, we will immediately get hot coffee. All the necessary items like coffee powder, water etc will be in that capsules. இந்த உறையை வாங்கி ஸ்மார்ட்போனில் மாட்டி , அப்ளிகேஷனைத் தர...

Stadium IN MID FOREST ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

Image
FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION Football stadium in mid forest .. ., மலேசியாவின் சபா மலையின் காட்டுக்குள் இருக்கிறது கண்களைக் கவரக்கூடிய இந்தக் கால்பந்து மைதானம் . நான்கு பக்கங்களிலும் இருக்கும் வேலிகளைச் சுற்றி அடர்த்தியான செடிகளும் கொடிகளும் ஆக்கிரமித்துள்ளன . கதைகளில் வரும் அற்புத உலகங்களில் இருக்கும் மைதானம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது ! லாங்கோன்கோன் பள்ளியின் ஆசிரியர் , இந்த மைதானத்தைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார் . “ இப்படி ஓர் இடத்தை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது . இயற்கையின் எழிலைச் சொல்ல வார்த்தைகள் இல்லை . வெயில் காலத்தில் கூட இந்த மைதானம் குளுகுளுவென்று இருப்பதற்கு இந்தத் தாவரங்களே காரணம் . தூய்மையான காற்றும் இதமான குளிரும் விளையாடுபவர்களுக்குப் புத்துணர்வை அளிக்கின்றன . எங்கள் மாணவர்கள் 15_ நிமிடங்களில் மலையேறி , மைதானத்தை அடைந்துவிடுவார்கள் . வாகனங்களில் சென்றால் 3 மணி நேரமாகும் ” என்கிறார் ஆசிரியர் . உலகின் பசுமையான கால்பந்து மைதானம் ! In Saba Hills Mala...

SINGLE MAN CREATES FOREST ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

Image
Single man creates a forest in Brazil  MIXED உலக மசாலா 0606 வின்சென்ட்டுக்கு ஜே! பிரேசிலில் உள்ள காடுகளை அழித்து வீடுகளைக் கட்டி வருகிறார்கள். In Brazil they are destroying the forests and building houses. ஆனால் ஒரு நிலத்தை வாங்கி, காட்டை உருவாக்கி இருக்கிறார் 83 வயது அன்டோனியோ வின்சென்ட். But an 83 year old man named Antonio Vincent bought land and is building a forest. “மரங்கள் அடர்ந்த வனப் பகுதியில் தான் என் குழந்தைப் பருவம் கழிந்தது. மரங்கள் வெட்டுவதையும் மரங்கள் வெட்டியதால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டதையும் கண்டேன். He says - "My childhood was spent in a place filled with lot of trees. I observed that we got water problem due to cutting of trees.  நம்மால் தண்ணீரை உருவாக்க முடியாது. இருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை கூட மனிதர்களுக்கு இல்லை. We can't create water. But we don't have enough sense to even preserve the existing water resources. பிறகு நகருக்கு வந்துவிட்டோம். ஆனாலும் வனத்தையே மனம் தேடிக் கொண்டிருந்தது. We came to...

GOAT EATS CASH ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

Image
GOAT EATS CURRENCY NOTES உத்தரபிரதேச மாநிலத்தில் உரிமையாளர் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் ரொக்கப் பணத்தை பசியால் வாடிய ஆடு சாப்பிட்டது. இதனால் அந்த உரிமையாளர் சோகத்தில் மூழ்கியுள்ளார். In Uttar Pradesh a hungry goat ate the currency notes worth Rs.62,000 . Due to this the owner is immersed in sadness. TAMIL MEANINGS / VOCABULARY  உத்தரபிரதேசத்தின் தல்கி ராம் பகுதியில் உள்ள சிலாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் சர்வேஷ்குமார் பால். இவர் செங்கல் வாங்குவதற்காக ரூ.66,000 பணத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந் தார்.  Sarveesh Kumar lives in Silapur, Thalkeram, UP. He had kept Rs.66,000 cash in his pant pocket. He had the intension to buy bricks. களைப்பு காரணமாக பணத்துடன் ஆடையை கழற்றி விட்டு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது பசியால் வாடியிருந்த அவரது ஆடு, பாக்கெட் டுக்கு வெளியே தெரிந்த அந்த பணத்தை சாப்பிட்டது. Due to tiredness he removed his clothes along with the cash and placed it in his house. Then he went to have a bath. At that time, his hungry goat started eating the cas...

Depression Disease that cripple people / psychology in tamil

Disease that cripple people - psychology in Tamil வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல் ஒய்.ஆண்டனி செல்வராஜ் வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது...

depression arresting people psychology in tamil

Image
Depression arresting people -psychology in Tamil  மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் - கு.கணேசன் உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாதான்.  2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது. . . மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள்.  ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும். நாள்பட்ட மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை...