Author eats book spoken english through tamil ezhilarasan translation
British Author eats book
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் புத்தகத்தை தின்ற ஆசிரியர்: தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு / British author eats book because he lost in a challenge ! Sensation in live television telecast.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது புத்தகத்தை தின்ற எழுத்தாளர் மேத்யூ குட்வின். / Mathew Goodwin a British author eats his book in a live television show.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் சவால் விட்டு தோல்வி அடைந்ததால், தான் எழுதிய புத்தகத்தையே அதன் ஆசிரியர் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. / British author eats his book because he lost in a challenge. This incident created lot of sensation.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தெரசா மே போட்டியிட்டார். / Recently the British parliamentary elections were held. Therasa May contested in this for the post of Prime Minister on behalf of the ruling CONSERVATIVE PARTY.
முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் ஜெரிமி கார்பின் போட்டியிட்டார்.
And Jerme Carbin too contested for the same post on behalf of the LABOURS PARTY.
இந்நிலையில், பேராசிரியரும், ‘"ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் ஏன் வாக்களித்தது"’ என்ற தலைப்பில் பிரக்ஸிட் தொடர்பாக புத்தகம் எழுதியவருமான மேத்யூ குட்வின் என்பவர் ட்விட்டரில் ஒரு சவால் விடுத்தார்.
At this juncture, Mathew Goodwin, Professor and author of the book relating to BRICLIST and titled "Why Britain Voted To Exit European Union" announced a challenge in Twitter.
கடந்த மே மாதம் 28-ம் தேதி ட்விட்டரில் அவர் வெளியிட்ட சவாலில், ‘ஜெரிமி கார்பின் தலைமையில் தொழிலாளர் கட்சி 38 சதவீத வாக்குகளை பெற்றால், நான் எழுதிய பிரக்ஸிட் புத்தகத்தை சந்தோஷமாக தின்பேன்’ என்று கூறினார்.
He said in his challenge in TWITTER on MAY 28 ,"If the LABOURS PARTY led by JERME CARBIN gets 38% votes I will happily eat the BRICLIST book that I wrote".
மேலும், தேர்தலில் தொழிலாளர் கட்சி 5 சதவீத வாக்குகள்தான் பெறும் என்று மேத்யூ கணித்திருந்தார்.
Further he had made a prediction that LABOURS PARTY will get only 5% votes.
ஜெரிமி கார்பினுக்கு தொழிலாளர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் தேர்தலில் அந்த கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று மேத்யூ குட்வின் எதிர்பார்த்தார்.
The senior leaders on the Labours Party were opposing Jerme Karbin. Hence Mathew Goodwin thought that the people will not vote for him.
ஆனால், தேர்தலில் தொழிலாளர் கட்சி எதிர்பார்த்ததைவிட ஜெரிமி கார்பின் தலைமையில் 40 சதவீத வாக்குகளைப் பெற்றது.
But the LABOURS PARTY got 40 % votes under the leadership of Jerme Carbin which was more than their expectation.
இதையடுத்து, ‘‘நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஸ்கை நியூஸ் சேனலில் மாலை 4.30 மணிக்கு என்னுடைய புத்தகத்தை தின்பேன்’ என்று மேத்யூ அறிவித்தார்.
Following this Mathew announced, "You have won. I will eat my book at 4.30pm in SKY NEWS channel".
அதன்படி, மேத்யூவை தனது நிகழ்ச்சிக்கு ஸ்கை நியூஸ் சேனல் அழைத்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மேத்யூவுக்கு, புத்தகத்தை தின்பது குறித்து நினைவூட்டப்பட்டது.
So the SKY NEWS Channel invited Mathew for the programme. And in the programme, Mathew was reminded about eating of his book.
அதை ஏற்றுக்கொண்ட மேத்யூ, தனது பிரிக்ஸிட் புத்தகத்தின் சில பக்கங்களைக் கிழித்து தின்றார்.
Accepting it, Mathew tore off a few pages from his BRICLIST book and ate them.
அந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
These scenes were telecast live and created lot of sensation.
‘‘சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவன் நான். எனவே, சொன்னபடி இங்கு உட்கார்ந்து புத்தகத்தை தின்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை (ஒளிபரப்பு செய்வது) பாருங்கள்’’ என்று தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறினார்.
He told the news reporter, "I always keep my words. Hence, I will sit here and eat my book. You please do your job ( telecasting job ).
பிரிக்ஸிட் புத்தகம் 272 பக்கங்களைக் கொண்டது. அத்தனை பக்கங்களையும் ஆசிரியர் மேத்யூ தின்றாரா என்பது தெரியவில்லை.
The total pages in the book were 272. We don't know whether Mathew ate all the pages or not.
நன்றி : தி இந்து June 12, 2017
Translated by
Ezhilarasan Venkatachalam

Online English Trainer
Salem
English Trainer
Comments
Post a Comment