Dog travels alone SPOKEN English THROUGH tamil EZHILARASAN
.
சியாட்டிலில் வசிக்கும் எக்லிப்ஸ் என்ற கறுப்பு லாப்ரடார் நாய், தினமும் பேருந்தில் தனியாகப் பயணம் செய்து வருகிறது.
ECLIPSE, a labrador breed dog, is travelling daily alone in a bus in Seattle.
எக்லிப்ஸின் உரிமையாளர் ஜெஃப் யங் வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பூங்காவுக்கு பேருந்தில் அழைத்துச் செல்வார்.
The owner of Eclipse, Jeff Yan, will take it to a park that is a little far in a bus.
4 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் இருவரும் காத்திருந்தனர். பேருந்து வர தாமதமானதால் யங் ஒரு சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தார்.
Four years ago, he was waiting for the bus. But since it got delayed, he started to smoke a cigarette.
அப்போது பேருந்து வந்துவிட்டது. அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று நினைத்தார்.
But the bus arrived. But he decided to catch the next bus.
ஆனால் பொறுமையிழந்த எக்லிப்ஸ் பேருந்தில் ஏறிவிட்டது. யங் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், அது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பேருந்து கிளம்பிவிட்டது.
But the impatient Eclipse got into the bus. In spite of repeated commands, it refused to get down and the bus started to move.
அன்று முதல் இன்று வரை யங் வந்தாலும் வராவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து காத்திருக்கிறது.
From that day onwards, whether Yan comes or not, Eclipse comes to the bus stop at the scheduled time and waits.
இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் எக்லிப்ஸை மிகவும் பிடிக்கும் என்பதால், எந்தப் பேருந்திலும் ஏறிச் சென்றுவிடுகிறது.
Since all the bus drives like Eclipse, it gets into any bus and get down at the park.
ஜன்னல் ஓர இருக்கையைப் பார்த்து அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டே பூங்கா நிறுத்தம் வந்தவுடன் இறங்கிக்கொள்கிறது.
It chooses the window seat to sit and enjoys the sight seeing. Then it gets down at its place.
கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் ஜன்னல் ஓர இருக்கைக்காகக் காத்திருக்கிறது. யாராவது இறங்கினால் தாவி ஏறி விடுகிறது.
When there is rush, it waits its turn to sit in the window seat. When someone vacates the window seat, it immediately jumps into it and sits.
சிலர் எக்லிப்ஸை பார்த்தவுடனே இருக்கையைக் காலி செய்து கொடுத்து விடுகிறார்கள்.
Immediately of seeing Eclipse, certain people vacate their seat and offer it to it.
“எக்லிப்ஸின் அழகையும் புத்திசாலித்தனத்தையும் பார்ப்பவர்கள், இது தங்களது நாய் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.
Many people who admire the beauty and intelligence of Eclipse and claim ownership to the dog.
2015-ம் ஆண்டு எக்லிப்ஸின் பேருந்து பயணம் சர்வதேச அளவில் செய்திகளில் இடம்பிடித்தது. அதிலிருந்து ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.
In 2015, the bus travel of Eclipse became international news. From then onwards, its admirers number had increased.
பலரும் போட்டோ எடுத்து, ஃபேஸ்புக்கில் போடுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறது” என்று பெருமிதப்படுகிறார் யங்.
Many are eager to take a photo and post it in Facebook. It shows love towards everyone. " tells Yan with pride.
“நாங்கள் எல்லோருமே எக்லிப்ஸ் வருகைக்காக காத்திருப்போம்.
பூங்கா நிறுத்தம் வரும் வரை எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்” என்கிறார் சக பயணி டேவிட்.
"We all will be waiting for the arrival of Eclipse. It will keep us happy until the Park Stop comes." tells David a co_passenger.
பேருந்தில் தனியாகப் பயணம் செய்யும் புத்திசாலி நாய்!
An intelligent dog that travels alone in bus.
உலக மசாலா: புத்திசாலி நாய்!
Courtesy :
தி இந்து.. June 23, 2017
..
MENU
.
Ezhilarasan Venkatachalam
Sal6
Tamil Based English Trainer
Tamil Based English Trainer
Comments
Post a Comment