Male Lion Cares for Cub spoken English through Tamil Ezhilarasan Translation

..



The responsible male lion.
உலக மசாலா: பொறுப்பான ஆண் சிங்கம்

VALLAS, the male lion that lives in England's zoo in Blackpool has changed our opinion about male lions.

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் உயிரினப் பூங்காவில் வசித்து வரும் வாலஸ், ஆண் சிங்கத்தைப் பற்றிய கருத்துகளை மாற்றியமைத்திருக்கிறது!
In 2015, Ranjel and Vallas were a pair that mated and had a cub, Kaari.
After 9 months Ranjel, the mother,  died.

ரேச்சலும் வாலஸும் குடும்பம் நடத்தி 2015-ம் ஆண்டு காரி என்ற ஆண் குட்டியைப் பெற்றெடுத்தன. 9 மாதங்களில் ரேச்சல் இறந்து போனது.
Generally male lions only participate in reproductive activities.
And it is only the female that cares for the young ones.

பொதுவாக ஆண் சிங்கங்கள் இனப் பெருக்கம் செய்வதோடு கடமையை முடித்துக்கொள்கின்றன.
They rear them and also teach them to hunt.

பெண் சிங்கம்தான் குட்டிகளை வளர்த்து, வேட்டையாடக் கற்றுக் கொடுத்து, பராமரிக்கும்.
In the absence of the caring female, the male will just drive away hyenas that tries to attach the young ones.

பெண் சிங்கம் இல்லாதபோது கழுதைப் புலி, போட்டி ஆண் சிங்கங்கள் குட்டியைத் தொந்தரவு செய்தால் விரட்டும் பணியை மட்டும் ஆண் சிங்கம் மேற்கொள்ளும்.
Otherwise, the male does not play any role at all in rearing the young ones.

மற்றபடி குழந்தை வளர்ப்பில் ஆண் சிங்கங்கள் பங்களிப்பைச் செலுத்துவதில்லை.
Since there were no other young or female lions in the zoo, the caretakers left the cub with the male lion.

காரியைத் தவிர வேறு குட்டிகளோ, பெண் சிங்கங்களோ இல்லாத காரணத்தால் வாலஸிடம் குட்டியை விட்டது பூங்கா நிர்வாகம்.
Within a few days, Vallas, the male that was immersed in the sadness following the death of his female pair, started to care for its young one.

கண் முன்னே மனைவி இறந்த சோகத்தில் இருந்த வாலஸ், சில நாட்களிலேயே காரியை அன்புடன் கவனிக்க ஆரம்பித்தது.
It offer its food to the cub, Kaari and played with it too.

தனக்கு அளிக்கும் உணவைக் கொடுத்து சாப்பிட வைத்தது. காரியுடன் சேர்ந்து விளையாடியது.
It made him forget the loss of his mother.
And Kaari also became close to his dad.

தாயின் பிரிவு தெரியாமல் பார்த்துக்கொண்டது. அதனால் காரியும் அம்மாவை மறந்து அப்பாவுடன் நெருக்கமானது.
He followed his dad wherever he went. Observing his dad, very soon Kaari also learnt to roar.
It also learnt to hunt.

வாலஸ் செல்லும் இடங்களுக்கெல்லாம் காரியும் சென்றது. அப்பா கர்ஜிப்பதைப் பார்த்து, வெகு விரைவிலேயே மகனும் கர்ஜிக்கத் தொடங்கியது. வேட்டையாடும் வித்தையைக் கற்றுக்கொண்டது.
The zoo keeper, Adam tells,  "Generally male lions dont take up the family responsibilities.
For us,  it is very surprising to see the behaviour of Vallas.

“பொதுவாக ஆண் சிங்கங்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில்லை.
வாலஸைப் பார்த்து எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
Male lions usually dont have enough patience and tolerance.

ஆண் சிங்கங்களுக்குப் பொறுமையோ, சகிப்புத்தன்மையோ இருப்பதில்லை.

But whatever Kaari does, Vallas is tolerating it very patiently.
ஆனால் காரி என்ன செய்தாலும் சிறிதும் எரிச்சலடையாமல் வாலஸ் பொறுமை காக்கிறது.
It cares for him like a mother.

அம்மாவைப் போல அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறது.
It is such a beautiful sight seeing both of them walking together and also sitting together on the rock.

அப்பாவும் மகனும் ஒன்றாக நடந்து செல்வதையும் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

Even if Kaari takes a bigger meat peace, he shows patience.
He will eat what is left out after his son had eaten.

காரி பெரிய துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டாலும் அமைதி காக்கும். மகன் சாப்பிட்ட பிறகு மிச்சமிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்ளும்.


Vallas in  Kaari's hero. "
காரியின் ஹீரோ வாலஸ்தான்!” என்கிறார் உயிரினப் பூங்காவின் அதிகாரி ஆடம்.

நன்றி : தி இந்து June 18, 2017

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215