Danger in Online games / Psychology in Tamil / childcare EZHILARASAN

தற்கொலைககு தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கான இணைப்புகளை அகற்ற வேண்டும்: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி

தற்கொலையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான இணைப்புகளை உடனடியாக அகற்றுமாறு சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. 50 நாட்கள் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு பிளேடால் கீறிக் கொள்வது போன்று பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்கும் உத்தரவுகள் கொடுக்கப்படும். கடைசி நாளில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படும். இந்த விளையாட்டில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் மகாராஷ்டிராவிலும் மேற்கு வங்கத்திலும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளையாட்டுக்கான இணைப்பை உடனடியாக அகற்றுமாறு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ,மைக்ரோசாப்ட், யாஹூ உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அபாயகரமான ஆன்லைன் விளையாட்டால் இந்தியாவில் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. குழந்தைகளை தற்கொலைக்குத் தூண்டும் இதுபோன்ற விளையாட்டுகளை நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே டெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘ஆபத்தான ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான இணைப்பை அகற்றாத சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

16 வயது சிறுவன் தற்கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விலப்புலசாலா என்ற இடத்தைச் சேர்ந்த மனோஜ் சி.மானு என்ற 16 வயது சிறுவன் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு கடந்த ஜூலை 26-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.மனோஜ் வீட்டுக்கு நேற்று காலை கேரள போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.

மேனகா வேண்டுகோள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணித்து தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நேற்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் கருத்து தெரிவிக்கையில், சில ஆன்லைன் விளையாட்டுகள் எதையும் செய்யத் தூண்டுகிறது என்று கூறினார்

நன்றி :

தி இந்து . 17 Aug 2017

Collected
by

Ezhilarasan Venkatachalam
e3 institute,
Arisipalayam, Salem.
English Made Easy
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215