LIONS AROUND DELIVERY ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN


..

..
In Gujarath a lady, Mangubin, gives birth to a baby in an ambulance surrounded by 12 lions.

குஜராத்தில் 12 சிங்கங்கள் புடை சூழ குழந்தையை பிரசவித்த பெண்
..
குஜராத்தைச் சேர்ந்த மங்குபின் மக்வானாவுக்கு கடந்த வியாழக்கிழமை மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது.

Last Thursday was an unforgettable day for Mangubin Makvana.

காரணம், 12 சிங்கங்கள் புடை சூழ ஆம்புலன்ஸில் குழந்தையை பிரசவித்துள்ளார் மங்குபின்.
The reason is that she gave birth to a child in an ambulance surrounded by 12 lions.

இந்தச் சம்பவம் குறித்து அவசர மேலாண்மை நிர்வாகி சேதன் காதே கூறும்போது,
Cheten Kaathae, the Emergency Management Director told,

"குஜாராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லுனாசாபூர் கிராமத்தைச் சேர்ந்த மங்குபினுக்கு வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

"In Gujarath, in Amrolee District in the Lonasapur village on Thursday at 2.30pm a lady, Mangubin started having labour pains.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அருகேவுள்ள அரசு மருத்துவமனையில் மங்குபினை அனுமதிக்க ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.

Following this, their relatives called an ambulance to take her to the nearby Government Hospital.

ஆம்புலன்ஸ் கிர் காடுகள் வனப்பகுதி வழியாக செல்லும்போது அந்த வழியில் வந்த 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டன.

When the ambulance was going through the GIR forest, 12 lions which came that way, surrounded it.

மேலும் சிங்கங்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சாலையை மறித்துள்ளன.
They also blocked the way of the ambulance.

இதனால் ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுனர் மற்றும் ஊழியர்கள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.
The driver and the crew in the ambulance got nervous due to this.

இந்த நிலையில் மங்குபினுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
At this situation, Mangubin got labour pains.

உடனடியாக சூழ்நிலையை புரிந்து கொண்ட ஊழியர்கள் மருத்துவருக்கு இதுகுறித்து தெரிவித்து மருத்துவரின் ஆலோசனைப் படி பிரசவம் பார்த்துள்ளனர்.
Understanding the situation, the crew informed this to the hospital. And acted as per the instructions of the doctor and conducted the delivery.

இதில் மங்குபினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Mangubin delivered a male baby.

அதன்பின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாதவ் சிங்கங்களின் அடுத்த நகர்வை உன்னிப்பாக நோட்டமிட்டிருக்கிறார்.
After this, the driver, Jaadav keenly observed the activities of the lions.

ஆம்புலன்ஸை அங்கிருந்து மெதுவாக ஓட்டிய ஜாதவ் ஆம்புலன்ஸ் முன் இருந்த விளக்குகளை எறிய விட்டுள்ளார்.

The driver slowly moved the vehicle with its head lights "ON".

அதன் பின் சிங்கங்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டுள்ளன.
Then the lions gave way to it.

தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

Both the child and mother were admitted into the hospital in a healthy state".

தி இந்து...  July 1, 2017
....................................................................
Translated into English
by
Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem.
ENGLISH TRAINING THROUGH TAMIL
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
..
MENU 
 ..DONATE PLEASE 
..
PLEASE SUBSCRIBE
 TO MY YOUTUBE CHANNEL


Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215