crows work FREE SPOKEN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN CROWS WORK

Crows that earn their living!

..
.. 
உழைத்து சாப்பிடும் காகங்கள்!

நெதர்லாந்தைச் சேர்ந்த ரூபென் வானும் பாப் ஸ்பிக்மனும் இணைந்து தெருவில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றை உருவாக்கினார்கள்.

Ruben wan and Pop Spickman of Netherland jointly developed a robot that will pick cigarette butts from the street.  
Vocabulary / Tamil Meanings   தமிழ் அர்த்தங்கள்

ஆனால் அந்த ரோபோட்டைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் தோன்றின. சாலைகளில் சைக்கிள் போன்ற வாகனங்கள் வராமலும் மனிதர்கள் தவறுதலாக மிதிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
But they had difficulties in using it. They may be accidentally stamped by humans and can work only when there are no cycles on the roads.

இதனால் ரோபோட்களுக்கு பதிலாக பறவைகளுக்குப் பயிற்சி அளித்து, பயன்படுத்த முடிவெடுத்தனர்.
Therefore, they decided to train birds for this job.

நீண்டகாலமாக புறாக்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்ததால், அவற்றைத் தேர்ந்தெடுத்தனர்.
Since pigeons were used for years by men, they picked pigeons for this job.


ஆனால் பயிற்சி அளிக்கும்போதுதான் எவ்வளவு கடினம் என்று புரிந்தது.
But training them was not an easy job.

அதனால் காகங்களுக்குப் பயிற்சியளிக்க முடிவெடுத்தனர்.
So they decided to train crows.

 “நெதர்லாந்து ரயில் நிலையங்களில் சிகரெட் துண்டுகளைச் சுத்தம் செய்வதே மிகப் பெரிய வேலை.
"Cleaning the cigarette butts in Netherland's railway station was a huge task.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே நாங்கள் முயன்று வருகிறோம்.
We are trying to solve this problem.

இந்த வேலையைக் காகங்களால் தான் மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை நாங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.
Through experience we learnt that only crows can do this job perfectly.

காகங்கள் புத்திசாலியாக இருக்கின்றன. சுற்றுப்புறத்தை உற்று நோக்குகின்றன. எளிதாக மனிதர்களிடம் நெருங்கிவிடுகின்றன.
Crows are very intelligent. They observe the environment keenly. They come near men very easily.

அதனால் காகங்களை வைத்து மனிதர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
So we got the hope that using crows we can help men.

சில காகங்களுக்கு சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, எங்கள் கருவியில் போடும்படி பயிற்சி அளித்தோம்.
We trained some crows to pick cigarette butts and drop them in our machine.

சரியாக அந்தக் கருவியில் சிகரெட் துண்டுகளைப் போட்டால், கருவியிலிருந்து வேர்க்கடலைகள் வெளிவரும்.
If the do the job correctly, peanuts will come out of the machine.


அதைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த சிகரெட் துண்டைத் தேடிப் பறக்க ஆரம்பித்துவிடும்.
It will eat the peanuts and fly away searching for the next cigarette butt.

இப்படிக் கடலைகளைச் சாப்பிடுவதற்காக சிகரெட் துண்டுகளைத் தேடித் தேடி எடுத்து வருகின்றன.
In order to eat peanuts they keep on searching for cigarette butts.

நாங்கள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக வேலை செய்கின்றன.
They are working more than what we had  expected.

பொது இடங்களில் சிகரெட் துண்டுகள் குறைந்து வருகின்றன.
Cigarette butts in public places are now getting reduced.

கொஞ்சம் உணவைக் கொடுத்துவிட்டு, அதிக வேலைகளை வாங்குகிறோம் என்று தோன்றுகிறது.
We feel that we give very little food but extract a great amount of work from them.

இப்படி சிகரெட் துண்டுகளை எடுத்து வருவதால், காகங்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும்.
We should also observe  whether the crows develop any health problems due to this activity.

ஒருவேளை காகங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் வேறு வழியைத்தான் நாட வேண்டும்” என்கிறார் ரூபென்.
If it harms the crows, then we should think of some other way for solving this problem.

உலகம் முழுவதும் சிகரெட் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
Worldwide the environment is getting polluted due to cigarettes.

ஓர் ஆண்டில் 6 லட்சம் கோடி சிகரெட்களை மனிதர்கள் புகைக்கிறார்கள்.
Humans smoke 6 lakh crores cigarettes in a year.

உழைத்துச் சாப்பிடும் காகங்கள்!
நன்றி: தி இந்து : 12 Oct 2017 உலக மசாலா:
..
Translated
by
Ezhilarasan Venkatachalam
Salem.
ENGLISH MADE EASY
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
..
DONATE PLEASE 
..

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215